Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!

T

The Leader Desk

ஏப்ரல் 12, 2022 • 3:01 AM

  அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கைக்கு இன்று தேவைப்படுவது ஆட்சி மாற்றமல்ல, புரட்சியைத் தவிர்ப்பதற்கான பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மாற்றமே எனவும் அவர் தெரிவித்தார்.சமூக ஊடகங்களில் நேர்காணல் ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
  • இந்த நோக்கத்திற்காக சட்ட சீர்திருத்தங்களின் தொகுப்பைத் தயாரித்து வருகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.“இன்று நிலவும் சூழ்நிலையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். இளைஞர்களால் வழிநடத்தப்படும் மக்கள், புதிய தொடக்கத்தையும் அமைப்புகளின் முழுமையான மாற்றத்தையும் விரும்புகிறார்கள்.
  • ஆகஸ்ட் வரை பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பணவீக்கம் என்பது காய்ச்சலைப் போன்றது, அது குறைவதற்கு முன் அதிகபட்சமாக அதிகரிக்கும்.
எழுத்து அளவு:

இலங்கைக்கு இன்று தேவைப்படுவது ஆட்சி மாற்றமல்ல, புரட்சியைத் தவிர்ப்பதற்கான பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள் உள்ளிட்ட அமைப்புகளின் மாற்றமே எனவும் அவர் தெரிவித்தார்.சமூக ஊடகங்களில் நேர்காணல் ஒன்றில் பேசிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தற்போது நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும்,'' எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அங்கு மேலும் பேசிய அவர், “புத்தாண்டுக்குப் பிறகு சில நாட்களில் நமது வெளிநாட்டு கையிருப்பு வற்றிபோகும். 

மே மாதம் முதல் அல்லது இரண்டாவது வாரம் வரை மட்டுமே இந்திய கடன் வரிகள் மற்றும் பிற உதவிகளைப் பயன்படுத்தி பொருளாதாரத்தை கொண்டு செல்ல முடியும். ஆகஸ்ட் வரை பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே இருக்கும். பணவீக்கம் என்பது காய்ச்சலைப் போன்றது, அது குறைவதற்கு முன் அதிகபட்சமாக அதிகரிக்கும்.

 இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தனியார் நிறுவனங்களை மூட வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் திட்டமே நமக்குத் தேவை. குறைந்த பட்சம் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நாம் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும். 

நான் முன்மொழிவது பாராளுமன்றம் நிதியை கையகப்படுத்தும் புதிய சட்டத்தை உருவாக்குவதாகும். இந்த நோக்கத்திற்காக   சட்ட சீர்திருத்தங்களின் தொகுப்பைத் தயாரித்து வருகிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.“இன்று நிலவும் சூழ்நிலையை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். 

இளைஞர்களால் வழிநடத்தப்படும் மக்கள், புதிய தொடக்கத்தையும் அமைப்புகளின் முழுமையான மாற்றத்தையும் விரும்புகிறார்கள். தற்போது நாடாளுமன்றத்தில் ஆட்சி மாற்றம் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்று வரும் அமைதியான போராட்டங்கள், மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்காவிட்டால் இது மக்கள் புரட்சியாக மாறும்,'' என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்! | Tamil Leader | We Lead the Nation