Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

மேலும் நான்கு இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!

T

The Leader Desk

ஏப்ரல் 9, 2022 • 4:27 AM

மேலும் நான்கு இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • கடந்த மாதம் இலங்கையில் இருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றநிலையில் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களின் விலை ஏற்றம் மட்டும் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகப்பு வட்டார அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:


நேற்று முன்தினம் இரவு மன்னார் மாவட்டம் முத்தரமித்தரை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகாஷ் என ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் ஒரு பைப்பர் படகில் நேற்று அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிசிசல்முனை கடற்கரையில் இவ்வாறு சென்ற இறங்கி உள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மெரைன் போலிஸார் இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியவாசிய பொருட்களின் விலை ஏற்றம் மட்டும் தட்டுபாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகப்பு வட்டார அதிகாரிகளிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் குறித்த நால்வரும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்படுவார்கள் என மெரைன் போலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மாதம் இலங்கையில் இருந்து நான்கு குடும்பத்தை சேர்ந்த 16 தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகாளாக சென்றநிலையில் அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தனுஷ்கோடி இலங்கைக்கு அருகே உள்ளதால் இறுதிகட்ட போரின்போதும் அதிகமான வடகிழக்கு மக்கள் அகதிகளாக தனுஷ்கோடி வழியாக தமிழகத்திற்குள் சென்றனர் தற்போதும் அவர்கள் மறுவாழ்வு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இலங்கையிக் தற்போதைய நிலைகாரணமாக இலங்கை வடகிழக்கு மக்கள் இந்தியாவிற்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் அதனை தடுக்கும் வகையில் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும் என கடலோர் பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மேலும் நான்கு இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்! | Tamil Leader | We Lead the Nation