Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

'அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் போராடுவார்கள்' - திகாம்பரம்

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2022 • 4:59 PM

'அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தோட்டத் தொழிலாளர்கள் வீதியில் போராடுவார்கள்' - திகாம்பரம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று தலவாக்கலையில் ஒன்றுகூடினர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய திகாம்பரம், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.
  • இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கம் வந்து இவர்களுக்கு அமைச்சு கொடுத்தால் மக்களைத் தள்ளிவிட்டு வாளிகளை வீசி அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.
  • “மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள், மக்கள் போராட்டத்திற்கு பயந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
எழுத்து அளவு:

“நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தோட்டத் தொழிலாளர்கள் தற்போது இந்த அரசாங்கத்திடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற வீதிக்கு வந்துள்ளனர். 

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டுவர கடுமையாக உழைத்தவர்கள் தற்போது அவரை வீட்டுக்கு அனுப்ப முயற்சிக்கின்றனர்” என தேசிய தொழிலாளர் சங்க தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் நேற்று தலவாக்கலையில் ஒன்றுகூடினர்.ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றிய திகாம்பரம், நாடு முழுவதிலும் உள்ள மக்களின் எதிர்ப்பை எதிர்கொண்டு அரசாங்கம் பதவி விலக வேண்டும் என்றார்.

 அரசாங்கத்தின் பங்காளியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (CWC) அண்மையில் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளது. 

இதனைக் குறிப்பிட்ட தேசிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் அவர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் மக்களை விட்டு வெளியேறி மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளவார்கள் என்றார்.

“மலையகத்தில் உள்ள அரசியல்வாதிகள், மக்கள் போராட்டத்திற்கு பயந்து அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இது ஒரு அரசியல் நாடகம். இவற்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 

அரசாங்கம் வந்து இவர்களுக்கு அமைச்சு கொடுத்தால் மக்களைத் தள்ளிவிட்டு வாளிகளை வீசி அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்வார்கள்.

எரிபொருள், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றம் மற்றும் அந்த பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் திகாம்பரம், ராஜபக்ஷ அரசாங்கம் அவற்றை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது.

"ஜனாதிபதியும் அவரது அரசாங்கமும் இன்னும் அதிகாரத்தில் உள்ளனர், மக்களின் கோரிக்கைகளை புறக்கணிப்பதைத் தவிர வேறு எதையும் செய்யவில்லை."இந்த அரசாங்கம் வீட்டுக்குச் செல்லும் வரை தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து போராட்டம் நடத்துவோம். என்றார்.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...