Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

கோட்டா வீட்டுக்கு சென்றால் இடைக்கால அரசாங்கம் அமைக்க நாம் தயார் - ஹர்ஷ

T

The Leader Desk

ஏப்ரல் 8, 2022 • 3:43 AM

கோட்டா வீட்டுக்கு சென்றால் இடைக்கால அரசாங்கம் அமைக்க நாம் தயார் - ஹர்ஷ

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைத்து செயற்படுமாறு அரசாங்கம் விடுக்கும் சவாலில் இருந்து நாங்கள் நழுவிச்செல்லப்போவதில்லை.
  • அங்கு அவர் தெடார்ந்து தெரிவிக்கையில், 2020 வரவு செலவு திட்டத்தின் பதில் உரையை நானே ஆற்றினேன்.
  • வரி வருமானம் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது.
  • அன்று 500 மில்லிய டொலர் கடன் செலுத்தும்போது அதனை முழுமையாக வழங்கவேண்டாம் என நாங்களும் மத்திய வங்கியின் நிதிக்குழுவில் இருந்தவர்களும் தெரிவித்தோம் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.
எழுத்து அளவு:


இடைக்கால நிர்வாகம் ஒன்றை அமைத்து செயற்படுமாறு அரசாங்கம் விடுக்கும் சவாலில் இருந்து நாங்கள் நழுவிச்செல்லப்போவதில்லை. மக்களின் கோரிக்கைக்கு தீர்வு கிடைக்கும் பட்சத்தில் நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான கலந்துரையாடுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தெடார்ந்து தெரிவிக்கையில்,

2020 வரவு செலவு திட்டத்தின் பதில் உரையை நானே ஆற்றினேன். அப்போது நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு சர்வதேச நாணய நிதியத்துக்கு செல்லவேண்டும் என தொடர்ந்து தெரிவித்தோம்.

அதனை அரசாங்கம் செய்யவில்லை. அன்று நாணய நிதியத்துக்கு சென்றிருந்தால் இந்தளவு நெருக்கடி நிலைமை ஏற்பட்டிருக்காது. அரசாங்கத்தின் இயலாமையினாலேயே இந்த நிலைமை ஏற்பட்டிருக்கின்றது.

இந்த பிரச்சினைக்கு ஐந்து பிரதான காரணங்கள் இருக்கின்றன. அவற்றில்,

வரி குறைப்பு
வரி குறைப்பு காரணமாக நாட்டின் வருமானம் வீழ்ச்சியடைந்தது . வரி வருமானம் இல்லாமல் நாட்டை கொண்டுசெல்ல முடியாது. நியாயமான முறையில் வரி அறவீட்டு முறைமை ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். அரசாங்கத்தின் வரி கொள்கை பிழை என்பதை நாம் தொடர்ந்து தெரிவித்து வந்தோம்.

கடன் மீள் வியூகம்
கடன் மீள் வியூகம் செய்யவேண்டும் என முன்னரே நாம் தெரிவித்தோம். ஜூலை மாதத்தில் ஒரு பில்லியன் கடன் செலுத்த வேண்டி இருக்கின்றது என அரசாங்கம் தெரிவிக்கின்றது.

அன்று 500 மில்லிய டொலர் கடன் செலுத்தும்போது அதனை முழுமையாக வழங்கவேண்டாம் என நாங்களும் மத்திய வங்கியின் நிதிக்குழுவில் இருந்தவர்களும் தெரிவித்தோம் அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை.

அந்த பணம் இருந்திருந்தால் எமக்கு தேவையான எரிபொருள், பால்மா, மருந்து பொருட்களை கொண்டுவர முடிந்திருக்கும்.
அந்தக் கடனை செலுத்துவதன் மூலம் சிலர் நூற்றுக்கு 200வீதம் இலாபம் பெற்றுக்கொண்டனர். இதுதொடர்பாக சர்வதேச ரீதியில் விசாரணை ஒன்றை மேற்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை முன்வைக்கின்றேன். என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

கோட்டா வீட்டுக்கு சென்றால் இடைக்கால அரசாங்கம் அமைக்க நாம் தயார் - ஹர்ஷ | Tamil Leader | We Lead the Nation