Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு - சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை!

T

The Leader Desk

ஏப்ரல் 7, 2022 • 3:30 AM

இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு -  சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியுள்ள சூழ்நிலையிலேயே, இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறுகினார்.
  • நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும்.
  • கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

இலங்கை வரலாற்றில் என்றுமே இல்லாதவாறான பொருளாதார நெருக்கடி ஆரம்பமாகியுள்ள சூழ்நிலையிலேயே, இன்று நாட்டின் அசாதாரண சூழ்நிலை குறித்து விவாதிக்க தீர்மானிக்கப்பட்டதாக அவர் கூறுகினார்.

தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது, எதிர்காலத்தில் மேலும் உக்கிரமடையும் சாத்தியம் காணப்படுவதாக பொருளியல் நிபுணர்களை மேற்கோள்காட்டி அவர் கருத்து வெளியிட்டிருந்தார். 

நாட்டில் இன்று எரிபொருள், சமையல் எரிவாயு, மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு மேலாக சென்று, கடுமையான உணவு பஞ்சம் எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அனுமானிக்க முடிகின்றது  நாடாளுமன்றத்தில் தாம் செயற்படும் விதத்திலேயே இதனை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பல்வேறு அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அதனால் அவர்களின் பாதுகாப்பு மற்றும் சிறப்புரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டார்.

இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தான் போலீஸ் மாஅதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்புக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். அதனை நாங்கள் செய்ய தவறினால் அதனால் பாதிக்கப்படப்போவது முழு பாராளுமன்றமுமாகும். 

அதனால் இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.எனவே நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடிக்கு பாராளுமன்றத்தின் ஊடாக ஜனநாயக ரீதியில் தீர்வு காண முடியும். 

அதனை நாங்கள் செய்ய தவறினால் அதனால் பாதிக்கப்படப்போவது முழு பாராளுமன்றமுமாகும். அதனால் இந்த வார இறுதிக்குள் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான பொதுவான வேலைத்திட்டத்தை வகுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.


 நாங்கள் அனைவரும் இணைந்து மேற்கொள்ளும் நடவடிக்கையிலேயே  ஆயிரக்கணக்கான உயிர்களின் பெறுமதி மற்றும் பாராளுமன்றத்தின் கெளரவம் தங்கி இருக்கின்றது என்றார்.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்படும் வாய்ப்பு - சபாநாயகர் மஹிந்த யாப்பா எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation