Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

“ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை” - சபாநாயகர்

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2022 • 5:13 AM

“ஜனாதிபதியை  பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு உரிமை இல்லை” - சபாநாயகர்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பாராளுமன்றத்தில் அவசரமாக அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாட்டின் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஜனாதிபதியை பதவி விலக செய்வதற்கு பாராளுமன்றத்தின் தலையீட்டை பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாடியுள்ளது.
  • இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.
  • அத்துடன், இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.ஏற்கனவே 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயேச்சையாக அமர்வதாக உறுதியளித்ததையடுத்து அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டது.
எழுத்து அளவு:

பாராளுமன்றத்தில் அவசரமாக அழைக்கப்பட்ட கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாட்டின் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையின் ஒரு அங்கமாக ஜனாதிபதியை பதவி விலக செய்வதற்கு பாராளுமன்றத்தின் தலையீட்டை   பிரதான எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேகய (SJB) நாடியுள்ளது.

எவ்வாறாயினும், ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோருவதற்கு பாராளுமன்றத்திற்கு ஜனநாயக உரிமை கிடையாது என சபாநாயகர் அதனை நிராகரித்துள்ளார். தற்போதைய நெருக்கடியை ஜனநாயக வழிகளில் மட்டுமே தீர்க்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு கட்சிகள் ஒன்றிணைந்து தீர்வை உருவாக்குமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். ஜனாதிபதியை தெரிவு செய்த மக்களே அது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் தெரிவித்தார்.

அத்துடன், இடைக்கால அரசாங்கத்திற்காக அரசாங்கத்துடன் கைகோர்க்க எதிர்க்கட்சிகள் மறுத்துவிட்டன.ஏற்கனவே 42 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயேச்சையாக அமர்வதாக உறுதியளித்ததையடுத்து அரசாங்கத்தின் பாராளுமன்ற பெரும்பான்மை ஆட்டம் கண்டது.

எவ்வாறாயினும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயேச்சையாக செயற்படும் தமது முடிவிலிருந்து பின்வாங்கியதாக தெரியவருகின்றது. 

இதன்படி தற்போது 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் சுயேச்சையாக செயற்பட உள்ளனர்.இதற்கிடையே அரசாங்கத்தில் இருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நாடாளுமன்றக் குழு நேற்று (ஏப்ரல் 05) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து  சுமார் நான்கு மணி நேரம் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துள்ளது.

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி.தயாசிறி ஜயசேகர, கலந்துரையாடல்கள் இடம்பெற்றாலும் கட்சியின் நாடாளுமன்றக் குழு தொடர்ந்தும் சுயாதீனமாக சபையில் அமரும் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...