Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நாட்டின் நெருக்கடி நிலைத் தொடர்பில் பாராளுமன்றில் தொடரும் விவாதம்!

T

The Leader Desk

ஏப்ரல் 6, 2022 • 2:27 AM

நாட்டின் நெருக்கடி நிலைத் தொடர்பில் பாராளுமன்றில் தொடரும் விவாதம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் பாராளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளதையடுத்து கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
  • இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 08 மணி வரை இடம்பெறவுள்ளது.
  • இதன் போது வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
  • இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.
எழுத்து அளவு:


அமைச்சரவை அமைச்சர்கள் பதவி விலகியுள்ள நிலையில் பாராளுமன்ற செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளதையடுத்து கட்சி தலைவர் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைக்கு ஒருவார காலத்திற்குள் தீர்வு காணும் வகையில் சிறந்த தீர்மானத்தை முன்னெடுக்க வேண்டும் என கட்சி தலைவர் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார உட்பட கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர்.

இலங்கையின் பொருளாதார நிலைமை குறித்து சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 8 ஆம் திகதி காலை 10 மணிமுதல் இரவு 08 மணி வரை இடம்பெறவுள்ளது.
இதன் போது வாய்மொழி மூலமான கேள்விகளுக்கு அனுமதி இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல எனவும் தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது எனவும் என அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த அவசர கால சட்டம் செவ்வாய்க்கிழமை (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை ஜனாதிபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...