Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவி விலகவில்லை - ஏமாற்றும் அரசு!

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2022 • 12:59 PM

சட்டத்தின் பிரகாரம் அமைச்சர்கள் பதவி விலகவில்லை - ஏமாற்றும் அரசு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
  • அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகினால் பாராளுமன்ற ஆசனங்களில் அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும்.
  • அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல.
எழுத்து அளவு:


தனிப்பட்ட ரீதியில் ஒருவர் தான் அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பதன் மூலம் அவ்வாறு விலகியதாக கருதமுடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்கள் பதவி விலகியதாக தெரிவிப்பது சட்டபூர்வமானதல்ல. அரசாங்கம் தொடர்பில் மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. பாராளுமன்றம் அதனை உணர்ந்து செயற்பட வேண்டும். இன்றேல் நிலைமை மோசமாகும். இந்த நிலையில் தனியான குழுவாக இயங்க முடிவு செய்துள்ளோம் என்றார்.

அத்துடன் அமைச்சுப்பதவிகளில் விலகுவதாக இருந்தால் அதுதொடர்பான ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கே கையளிக்கவேண்டும். அவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப்பதவிகளில் இருந்து விலகினால் பாராளுமன்ற ஆசனங்களில் அமைச்சர்களுக்கே முன்னுரிமை வழங்கவேண்டும். அவ்வாறான எந்த விடயமும் இடம்பெறவில்லை. அதேநேரம் பிரதி சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்திருக்கின்றார். அவரது இடத்துக்கு ஒருவரை உடனடியாக நியமிக்கவேண்டும். அதனால் சபாநாயகர் இதுதொடர்பில் தெளிவுபடுத்தவேண்டும் என இதன்போது எதிர்க்கட்சி உறுப்பினர் புத்திக்க பத்திரண கோரினார்.

இதற்கு பதிலளித்த சபாநாயகர், அமைச்சர்கள் பதவி விலகியமை மற்றும் பிரதி சபாநாயகர் பதவி விலகியமை தொடர்பில் எனக்கு ஜனாதிபதி அறிவிக்க வில்லை. ஜனாதிபதி அறிவித்த பின்னர் தான் அதுதொடர்பில் பாராளுமன்றத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...