Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் - ஜனாதிபதி

T

The Leader Desk

ஏப்ரல் 5, 2022 • 2:57 AM

பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் - ஜனாதிபதி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று (05) பாராளுமன்றம் கூடவுள்ளது.
  • இந்நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.
  • பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் தனித்தனியாக சுயேச்சைக் குழுக்களாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் தனித்தனி குழுக்களாக அமரவுள்ளனர்.
எழுத்து அளவு:


நேற்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற ஆளும் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் இன்று (05) பாராளுமன்றம் கூடவுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பான்மையை இழக்கும் அபாயத்தில் உள்ளது.

10 பங்காளிக் கட்சிகளின் 16 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 14 உறுப்பினர்களும் தனித்தனியாக சுயேச்சைக் குழுக்களாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் குழுவும் தனித்தனி குழுக்களாக அமரவுள்ளனர்.

அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தை அழிக்கும் நோக்கில் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமது அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற முடியாததன் காரணமாக அரசாங்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுள்ளதாக பல ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.

மக்களின் இந்த பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.

உரப்பிரச்சினை காரணமாகவே இந்த நெருக்கடி ஆரம்பமானது என்றும் அது அரசாங்கத்தின் மீதான வெறுப்பாகவே தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகவும் அமைச்சர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சரவை இராஜினாமா செய்துள்ளதாகவும், ஏனைய கட்சிகளுடன் கலந்தாலோசித்து அமைச்சரவையை நியமிக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை நியமிக்கப்படும் போது சமல் ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட மாட்டாது எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றம் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி இறுதியாக கூடிய பின்னர் ஏப்ரல் 5ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு கூடுகின்றது. 

எனினும் அமைச்சர்கள் பதவி விலகி இருப்பதுடன் 4அமைச்சர்கள் மாத்திரமே நியமி்க்கப்பட்டிருப்பதால்   கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய பாராளுமன்ற நடவடிக்கைகள் இடம்பெறுமா என்பது  சந்தேகமாகும் .  

அத்தோடு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் இல்லாமல்  பாராளுமன்ற விவாதத்தை கொண்டுசெல்வது சாத்தியமில்லை.

அதனால் இன்றைய தினம் பாராளுமன்றம் கூடிய பின்னர் கட்சித் தலைவர்களின் கூட்டம் இடம்பெற்று, அதன் பின்னரே பாராளுமன்ற நடவடிக்கைகளை எவ்வாறு கொண்டுசெல்வது என தீர்மானிக்கப்படும் என தெரியவருகின்றது.

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெரும்பான்மையை நிரூபிக்கும் எவருக்கும் அதிகாரத்தை வழங்கத் தயார் - ஜனாதிபதி | Tamil Leader | We Lead the Nation