Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த மாற்றம்?

T

The Leader Desk

ஏப்ரல் 3, 2022 • 7:50 PM

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த மாற்றம்?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னதாக, அமைச்சுப் பதவிகளில் இருந்து விலகுவதாக நாமல் ராஜபக்ஸ அறிவித்திருந்ததோடு நீதி அமைச்சர் அலிசப்ரியும், பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.
  • எவ்வாறாயினும், இலங்கை மக்கள் தற்போது குடும்ப அரசியலுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர்.
  • https://bit.ly/3uHGkH6 https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#.
எழுத்து அளவு:

எவ்வாறாயினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை என  பிரதமர் ஊடகப்பிரிவு இன்று அறிவித்திருந்தது.இந்நிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியில் இருந்து விலகவில்லை  என்றால் அரசியலமைப்பின் 49 ஆவது பிரிவுக்கு அமைய உத்தியோகபூர்வமாக அமைச்சரவை கலைக்கப்படமாட்டாது என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, அமைச்சுப் பதவிகளில்  இருந்து விலகுவதாக  நாமல் ராஜபக்ஸ அறிவித்திருந்ததோடு நீதி அமைச்சர் அலிசப்ரியும்,  பதவி விலகுவதாக அறிவித்திருந்தனர்.

இதேவேளை, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவும் பதவி விலகியுள்ளார். அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இதேவேளை இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் சந்தித்துள்ள முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை நியமிக்கும் யோசனை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய பிரதமருக்கான பிரேரணையையும் முன்வைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு இடையே விசேட சந்திப்பொன்று இடப்பெற்ற நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளனர்.

எவ்வாறாயினும், இலங்கை மக்கள் தற்போது குடும்ப அரசியலுக்கு எதிராக போர்கொடி தூக்கியுள்ளனர். ஜனாதிபதியை பதவி விலகுமாறு அழைப்பு விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களை சமாதானப்படுத்தும் இந்த முடிவுகள் மக்களை சமாதானப்படுத்துமா என்பது சந்தேகமே!

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

https://developers.facebook.com/docs/plugins/embedded-video-player/#

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை அரசியலில் எதிர்பார்த்த மாற்றம்? | Tamil Leader | We Lead the Nation