Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

வடக்கு,கிழக்கு தனி மாநிலத்தை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்! ரணில்

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2021 • 9:19 AM

வடக்கு,கிழக்கு தனி மாநிலத்தை விட கொழும்பு துறைமுக நகரத்திற்கு அதிக அதிகாரங்கள் இருக்கும்! ரணில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
  • ஒரு நல்ல சட்டத்தை எவரும் தடுக்கப் போவதில்லை என்றும், அதனை இயற்றுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் இருக்க வேண்டும், அமைச்சரவை இறுதியாக பொறுப்பேற்க வேண்டும்.
  • இதேவேளை 2001-2004 க்கு இடையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியை பிரபாகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.
எழுத்து அளவு:

இந்த துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நாடு ஒரு சட்டம் என்ற நிலை மாற்றப்பட்டு இப்போது ஒரு நாட்டிற்கு இரண்டு சட்டங்கள் காணப்படுவதாகவும் இதன்போது ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டினார். தற்போது சீன காலனியாக கொழும்பு துறைமுக நகரம் மாறினால் அது போரின் போது பிரபாகரன் கட்டுப்பாட்டில் இருந்த பகுதியை விட அதிக அதிகாரம்கொண்ட பகுதியாக இருக்கும் என்றும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

ஒரு நல்ல சட்டத்தை எவரும் தடுக்கப் போவதில்லை என்றும், அதனை இயற்றுவதற்கு முன்னர் மறுபரிசீலனை செய்ய நீதிபதிகள் இருக்க வேண்டும், அமைச்சரவை இறுதியாக பொறுப்பேற்க வேண்டும்.

ஆனால் இங்கு அந்த நிலைமை இல்லை எனவும் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார். இதேவேளை 2001-2004 க்கு இடையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது வடக்கு மற்றும் கிழக்கின் பெரும்பகுதியை பிரபாகரன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.

மேலும் நோர்வே கொண்டுவந்த சமாதான உடன்படிக்கை மூலம் வடக்கு மற்றும் கிழக்கில் ஒரு தனி மாநிலத்தை உருவாக்க பிரபாகரனை அனுமதித்ததாக ரணில் விக்ரமசிங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...