Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் வியாபாரம்!

T

The Leader Desk

ஏப்ரல் 27, 2021 • 8:06 AM

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் வியாபாரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கம்பஹா பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
  • இந்த வேலைத்திட்டத்தினால் இலங்கை மக்களே பாதிக்கப்பட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • சிங்கப்பூர், சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக செல்லும் இந்திய பிரஜைகள், வேறொரு நாடொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.
எழுத்து அளவு:

கம்பஹா பகுதியில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சிங்கப்பூர், சவூதி உள்ளிட்ட நாடுகளுக்கு வேலை வாய்ப்பு பெற்றுக்கொள்வதற்காக செல்லும் இந்திய பிரஜைகள், வேறொரு நாடொன்றில் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

இந்த விடயத்தை அறிந்துக்கொண்ட இலங்கையிலுள்ள சில வர்த்தகர்கள் மற்றும் சிவில் விமான சேவை அதிகார சபையிலுள்ள சில அதிகாரிகள் இணைந்து, இதனை வர்த்தகமாக முன்னெடுக்க முயற்சித்துள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தினால் இலங்கை மக்களே பாதிக்கப்பட போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை இந்த விடயம் தொடர்பில், சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள  சிவில் விமான சேவை இராஜாங்க அமைச்சர் டி.வி.ஷானக்க,

சிவில் விமான சேவை நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என கூறிய அவர், அது தொடர்பில் விசாரணை நடத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். சிவில் விமான சேவைக்கு தனிமைப்படுத்தல் வசதிகள் வழங்கப்படவில்லை என  கூறுகின்றார்.

எனினும், இந்த விடயம் தொடர்பில் சுகாதார அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை நடத்த எதிர்பார்த்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கையில் இந்தியர்களை தனிமைப்படுத்தி ஐரோப்பாவுக்கு அனுப்பும் வியாபாரம்! | Tamil Leader | We Lead the Nation