Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

எண்ணெய் தொடர்பாக சவுதியின் அதிரடி திட்டம்!

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2021 • 4:47 PM

எண்ணெய் தொடர்பாக சவுதியின் அதிரடி திட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதாவது லிக்விட் எரிபொருளுக்கு பதிலாக, கேஸ் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த திட்டமிடுவதாகவும் அந்த நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.
  • மேலும் அப்படி செய்தால் சவுதிக்கு, அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.
  • பல ஒப்பந்தங்களில் கையொப்பம் சவுதியின் இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சவுதிக்கு 800 பில்லியன் ரியால்களை (213.34 பில்லியன் டாலர்), அரசாங்கத்திற்கு சேமிக்க உதவும்.
  • மிக மோசமாக பாதிப்பு சவுதியின் இந்த பிரமாண்ட திட்டமானது, கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக குறைந்த கச்சா எண்ணெய் விலையால், மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது.
எழுத்து அளவு:

அதாவது லிக்விட் எரிபொருளுக்கு பதிலாக, கேஸ் மற்றும் புதுபிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களை பயன்படுத்த திட்டமிடுவதாகவும் அந்த நாட்டு நிதியமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் அப்படி செய்தால் சவுதிக்கு, அடுத்த பத்தாண்டுகளில் 200 பில்லியன் டொலர்களை மிச்சப்படுத்த முடியும் என தெரிவித்துள்ளது.

சவுதியின் சூப்பர் திட்டம்

இதன் மூலம் செலவுகளை குறைப்பதற்காக சவுதி முயல்வதாகவும் கூறியுள்ளது. மேலும் உலகின் தலைசிறந்த எண்ணெய் ஏற்றுமதியாளர் அதன் பொருளாதாரத்தினை நவீனமயாக்குவதற்கும், வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எண்ணெய் வருவாயை மட்டுமே சார்ந்து இருப்பதை குறைப்பதற்காகவும் இந்த திட்டத்தினை திட்டமிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சவுதி இந்த திட்டத்தில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பல ஒப்பந்தங்களில் கையொப்பம்

சவுதியின் இந்த திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் சவுதிக்கு 800 பில்லியன் ரியால்களை (213.34 பில்லியன் டாலர்), அரசாங்கத்திற்கு சேமிக்க உதவும். அரசின் இந்த திட்டம் சேமிப்புக்கும், முதலீட்டிற்கும் பயன்படுத்தலாம் என திட்டமிடுகின்றது. அதுமட்டும் அல்ல, எண்ணெய் பயன்பாட்டினை குறைப்பதற்காக, மின்சார வாங்குதல் தொடர்பான ஒப்பந்தம், ஏழு புதிய சோலார் திட்டங்கள் குறித்தான ஒப்பந்தம், மின்சார உற்பத்தி குறித்தான ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

மிக மோசமாக பாதிப்பு

சவுதியின் இந்த பிரமாண்ட திட்டமானது, கடந்த ஆண்டு கொரோனா பரவலின் காரணமாக குறைந்த கச்சா எண்ணெய் விலையால், மிக நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. சவுதியின் முக்கிய வருவாய் என்பது இந்த எண்ணெய் வர்த்தகமாகும். ஆக எண்ணெய் விலை வீழ்ச்சியினால் சவுதி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதன் பின்னர் தான் சவுதி இந்த திட்டங்களை வேகப்படுத்த தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நிதி நிலை பராமரிப்பு

மேலும் 2025 மற்றும் 2030க்கும் வரையிலான நிதி நிலைத் தன்மை என்பது எங்களுக்கு முன்னுரிமையாக இருக்கும். விஷண் 2030 நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் நாங்கள் அடையும் வரை, நிதி நிலைத்தன்மையை பராமரிக்கவும் அரசாங்கம் செலவினங்களை கட்டுப்படுத்தவும் வேண்டும் என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டின் இறுதியில் வேலையின்மை 12.6% ஆக இருந்தது. கடந்த ஆண்டு இரண்டாவது காலாண்டில் பொருளாதாரம் தொற்று நோய்களின் போது இந்த விகிதம் 15.4% ஆக இருந்தது. இந்த நிலையில் 2030ல் 7% மேல் இருக்க வேண்டும் என்றும் சவுதி இலக்கு வைத்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எண்ணெய் தொடர்பாக சவுதியின் அதிரடி திட்டம்! | Tamil Leader | We Lead the Nation