Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது!

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2021 • 3:45 PM

வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • "ஒரு குடும்பத்தில் தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த நபர் வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம்.
  • கொரோனா தடுப்பூசிகளுக்கென 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே மாநில அரசுகளுக்கு வாங்கித்தர வேண்டுமென இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
  • இந்தப் புதிய கொள்கையின்படி, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளே மாநில அரசுகள் அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
  • ஏற்கனவே சில தயாரிப்பாளர்கள் மாநில அரசுகளுக்கென கூடுதல் விலை நிர்ணயித்து அறிவித்துள்ளனர்.
எழுத்து அளவு:

"ஒரு குடும்பத்தில் தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த நபர் வீட்டிலும் மாஸ்க் அணிய வேண்டியது அவசியம். ஏனென்றால் வீட்டில் உள்ள பிற குடும்ப உறுப்பினர்களுக்கும் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதேபோன்று வீட்டில் யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்க் அணிய வேண்டியது அவசியம் என்றே நான் கூறுவேன்," என நிடி ஆயோக் குழுவின் சுகாதாரக் குழு உறுப்பினரும், மருத்துவருமான வி.கே.பால் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசிகளுக்கென 35 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், அனைவருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே மாநில அரசுகளுக்கு வாங்கித்தர வேண்டுமென இந்தியப் பிரதமர் மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

தடுப்பூசி

"கோவிட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்டத்திற்கென புதிய கொள்கையை மத்திய அரசின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. இந்தப் புதிய கொள்கையின்படி, 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசிகளே மாநில அரசுகள் அளிக்க வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. இந்தத் தடுப்பூசிகளை மாநில அரசுகள் முன்பே நிர்ணயிக்கப்பட்ட விலையில் வாங்க வேண்டியுள்ளது. இது இந்திய அரசு தடுப்பூசிகளை வாங்க அளிக்கும் விலையைவிட முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது. ஏற்கனவே சில தயாரிப்பாளர்கள் மாநில அரசுகளுக்கென கூடுதல் விலை நிர்ணயித்து அறிவித்துள்ளனர்.

இம்மாதிரி வெவ்வேறுவிதமான விலை நிர்ணயம் செய்வது மாநில அரசுகளுக்குக் கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதால், இது நியாயமற்றது. மத்திய அரசோடு ஒப்பிடுகையில் மாநில அரசுகளிடம் மிகக் குறைவான நிதி ஆதாரமே உள்ளது. கோவிட் - 19 தடுப்பூசிகளுக்கென 2021-22 பட்ஜெட்டில் 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், மூன்றாம் கட்ட தடுப்பூசித் திட்டத்திற்காக தடுப்பூசிகளை மத்திய அரசு வாங்கி அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் எதிர்பார்ப்பது சரியாகவே இருக்கும்.

ஆகவே இந்தப் பின்னணியில், எல்லா வயதினருக்குமான தடுப்பூசிகளை மத்திய அரசே வாங்கி அளிக்க வேண்டும். வரும் வாரங்களில் தடுப்பூசி அளிப்பது சிறப்பான முறையில் நடப்பதற்கு ஏதுவாக, தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது உள்ளிட்ட வாய்ப்புகளையும் மத்திய அரசு ஆராய வேண்டும்" என முதலமைச்சர் தனது கடிதத்தில் கூறியிருக்கிறார்.

இந்தியாவில் உற்பத்தியாகும் கோவிஷீல்ட், கோவாக்ஸின் ஆகிய தடுப்பூசிகளுக்கு, அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள் விலைகளைச் சமீபத்தில் அறிவித்தன. அதன்படி மத்திய அரசுக்கு ஒரு விலையும் மாநில அரசுகளுக்குக் கூடுதல் விலையும் தனியாருக்கு அதைவிட கூடுதல் விலைகளும் அறிவிக்கப்பட்டிருந்தன.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

வீட்டிலேயும் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் வந்துவிட்டது! | Tamil Leader | We Lead the Nation