Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

றிசாத்துக்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்களா? இம்ரான் மஹ்ரூப்

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2021 • 2:36 PM

றிசாத்துக்காக அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறப்பார்களா? இம்ரான் மஹ்ரூப்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்: நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறி பாரிய பொய்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது . ஆட்சிக்கு வர அவர்கள் கூறிய அனைத்தும் பொய் என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதால் அதை தடுக்க தமது சர்வாதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
  • கடந்த வாரம் றிசாட்டின் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சத்தமாக நல்லாட்சி அரசுக்கு எதிராக பேசினார்.
  • மக்களின் எதிர்க்கட்சியாக சீனி ஊழல், தேங்காய் எண்ணெய் மோசடி, காடழிப்பு, துறைமுக நகரம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மக்கள் முன் நாம் வெளிக்கொண்டு வந்தோம்.
எழுத்து அளவு:

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்:

நல்லாட்சி அரசாங்கத்தை குறைகூறி பாரிய பொய்களுக்கு மத்தியில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது .  ஆட்சிக்கு வர அவர்கள் கூறிய அனைத்தும் பொய்  என மக்கள் உணர ஆரம்பித்துள்ளதால் அதை தடுக்க தமது சர்வாதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.

மக்களின் எதிர்க்கட்சியாக சீனி ஊழல், தேங்காய் எண்ணெய் மோசடி,  காடழிப்பு, துறைமுக நகரம், ஈஸ்டர் தாக்குதல் உள்ளிட்ட விடயங்களை மக்கள் முன் நாம் வெளிக்கொண்டு வந்தோம்.

அதில் முக்கியமாக பாத்திரமாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ செயற்பட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த அரசு இன்று அவரை கைதுசெய்ய  முயற்சிக்கிறது. இதன் உண்மை தன்மை வெளியில் தெரிந்ததும் வழமைபோல் இனவாதத்தை தூண்டி தமது இயலாமையை மறைக்க  றிசாத்தை கைது செய்துள்ளனர். இந்த கைதுகளுக்கு அஞ்சி எதிர்க்கட்சி வாயை மூடி இருக்காது

இன்று றிசாட் சார்பாக பேச  அவரது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்  யாருமில்லை. ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களே ரிசாத்துடன் உள்ளனர்.  அனைவரும் இருபதுக்கு கை  உயர்த்தியதால் அவர்களின் வாய்களுக்கு  பூட்டு  போடப்பட்டுள்ளது.இவர்களின் கட்சி தலைவர் கைது செய்யப்பட்ட போது வாய் திறக்காத இவர்களின் வாய் அரசாங்கத்துக்கு வால் பிடிக்க மட்டும் திறக்கப்படுகிறது .

கடந்த வாரம் றிசாட்டின் கட்சி நாடாளுமன்ற  உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றத்தில் மிகவும் சத்தமாக நல்லாட்சி அரசுக்கு எதிராக பேசினார்.

வெட்கம் ,அந்த அரசில்தான் அவரும் இருந்தார். அரசால் வழங்கப்பட்ட அனைத்து சலுகைகளையும் பெற்றுவிட்டு இன்று இந்த அரசுக்கு வால்  பிடிக்க கேவலமான அரசியல் செய்கிறார்.

அவரால் முடிந்தால் அதே சத்தத்துடன் அவரின் கட்சி தலைவர் றிசாத்தின் கைதுக்கு எதிராக பேச முடியுமா? தைரியம் உள்ளதா ?

கடந்த வாரம் பாராளுமன்றத்தில் ஈஸ்ட்டர் தாக்குதலின் இரண்டுவருட பூர்த்தி அனுஷ்ட்டிக்கப்பட்டபோது ஏற்பட்ட அமைதியின்மையில் அரச உறுப்பினர்கள் முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் தலைவர்களுக்கு எதிராகவும் இனவாத கூச்சலிட்டனர். அப்போதுகூட இருபதுக்கு வாக்களித்த உறுப்பினர்கள் எதுவும் பேசாமல் வெளியே ஓடிவிட்டனர். அப்போதுகூட நாம்தான் முஸ்லிம் தலைவர்களுடன் இருந்தோம் என தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...