Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

எந்த தடை வந்தாலும் எமது மே தின நிகழ்வு இடம்பெறும்! ஜே.வி.பி

T

The Leader Desk

ஏப்ரல் 25, 2021 • 1:43 PM

எந்த தடை வந்தாலும் எமது மே தின நிகழ்வு இடம்பெறும்! ஜே.வி.பி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று யாழ் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூறும் நாள், எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த இரண்டு தினங்களையும் தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.
  • இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது.
எழுத்து அளவு:

இன்று யாழ் மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இம்முறை மே தினத்தை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் எனினும் இந்த அரசாங்கமானது எமது மே தின நிகழ்வுகளை தடை செய்வதற்கு பல்வேறு விதத்திலும் முயன்று வருகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியினராகிய நாங்கள் எந்த தடை வந்தாலும் கொழும்பிலும் ஏனைய மாவட்டங்களிலும் எமது மே தினத்தை நினைவு கூறுவோம் என தெரிவித்ததோடு மே மாதம் என்பது ஒரு விசேட மாதமாகும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு மற்றும் மேதின நிகழ்வு இடம்பெறும் மாதமாகும்.

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கான இறந்த உயிர்களை மக்கள் நினைவு கூறும் நாள், எனினும் இந்த அரசாங்கமானது தற்போது கொரோனா என்ற ஒரு மாயையை உருவாக்கி இந்த இரண்டு தினங்களையும் தடுப்பதற்காகவே இந்த கொரோனா என்ற குழப்பத்தை பயன்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதனால் மக்கள் விடுதலை முன்னணி என்ற வகையிலே விஷேடமாக முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்கள் வேறுநாட்டு மக்கள் இல்லை எதிரிநாட்டு பிள்ளைகள் இல்லை அவர்கள் எங்களது சகோதரர்கள் அதனால் அந்தச் சகோதரர்களை நினைவு கூர்வதற்கு அந்த மக்களுக்கு உரிமை இருக்கின்றது.

அந்த உரிமையை அரசாங்கம் தொடர்ந்தும் மறுத்துவருகின்றது அதனால் இதற்கு எங்களுடைய வன்மையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றோம்.

முள்ளிவாய்க்காலில் இறந்தவர்கள எதற்காகப் போராடினார்கள் என்பதல்ல பிரச்சினை அவர்கள் எதற்காக போராடினாலும் அவர்கள் எமதுநாட்டு மக்கள் மக்கள் ஆகவே உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதை யாரும் தடுக்க முடியாது எனவே மக்களின் உரிமையை இந்த அரசாங்கம் மதிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...