Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

அரசை எவராலும் காப்பாற்ற முடியாது! விமல்

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2021 • 4:34 PM

அரசை எவராலும் காப்பாற்ற முடியாது! விமல்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மே தின நிகழ்வுகளை அரசு தடுத்து நிறுத்தியமை ஜனநாயக விரோதமாகும்.
  • ஆனால், அரசுக்குள் இருக்கும் முக்கிய இரு தலைவர்களையும் (ஜனாதிபதி, பிரதமர்) இயக்குகின்ற ஒரு முக்கிய புள்ளிதான் இந்த நிகழ்வுகளை நிறுத்துவதற்கு மூல காரணமாக அமைந்துள்ளார்.
  • இலங்கையில் கொரோனாவைக் காரணம் காட்டி மே தினம் அன்று எந்த நிகழ்வுகளையும் நடத்தவேண்டாம் என்று இராணுவத்தளபதி ஊடாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
எழுத்து அளவு:

அது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மே தின நிகழ்வுகளை அரசு தடுத்து நிறுத்தியமை ஜனநாயக விரோதமாகும்.

இலங்கையில் கொரோனாவைக் காரணம் காட்டி மே தினம் அன்று எந்த நிகழ்வுகளையும் நடத்தவேண்டாம் என்று இராணுவத்தளபதி ஊடாக ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளவேண்டும். இது மக்கள் ஆணையுடன் அமைக்கப்பட்ட அரசு.

எனவே மக்களின் உரிமைகளை வெளிக்காட்டும் நிகழ்வுகளை அடியோடு நிறுத்துவது ஜனநாயக விரோதம். மேலும்,சுகாதார விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டு நிகழ்வுகளை பெரும் எடுப்பில் அல்லாமல் ஒரு கட்டமைப்புக்குள் நடத்தலாம் என்று அரசு அறிவித்திருக்கலாம்.

ஆனால், அரசுக்குள் இருக்கும் முக்கிய இரு தலைவர்களையும் (ஜனாதிபதி, பிரதமர்) இயக்குகின்ற ஒரு முக்கிய புள்ளிதான் இந்த நிகழ்வுகளை நிறுத்துவதற்கு மூல காரணமாக அமைந்துள்ளார்.

அரசுக்குள் இன்று எழுந்துள்ள முரண்பாடுகளுக்கு அந்த முக்கிய புள்ளிதான் காரணம். பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நாம் புறக்கணித்ததில் நியாயம் உண்டு.

இந்த நிலையில் மே தின நிகழ்வுகளை நாம் எவ்வாறு நடத்துவது என்று ஆலோசித்துக் கொண்டிருந்த நிலையில் அந்த நிகழ்வுகள் அனைத்தையும் நடத்துவதற்கு அரசு தடை விதித்துள்ளது.

அரசுக்குள் இருக்கின்ற வேற்றுமைகளை ஜனாதிபதியும், பிரதமரும் உடன் களையவேண்டும். இல்லையேல் அரசை எவராலும் காப்பாற்ற முடியாது என தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசை எவராலும் காப்பாற்ற முடியாது! விமல் | Tamil Leader | We Lead the Nation