Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

இரண்டாம் கட்டம் வழங்க தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை! லலித் வீரதுங்க

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2021 • 10:32 AM

இரண்டாம் கட்டம் வழங்க தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை! லலித் வீரதுங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனவே மே மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக முன்னனெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
  • இதன்போது அவர் மேலும் கூறுகையில் , இலங்கையில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன.
  • அதற்கமைய இதுவரையில் 9 இலட்சத்து 25 242 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் தற்போது 3 இலட்சத்து 56 000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
எழுத்து அளவு:

எனவே மே மாதம் முதல் வாரத்திலிருந்து இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக முன்னனெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கொவிட் பரவல் தொடர்பான நேற்றைய விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் ,

இலங்கையில் கடந்த ஜனவரி 29 ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டன. அதற்கமைய இதுவரையில் 9 இலட்சத்து 25 242 பேருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது 3 இலட்சத்து 56 000 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அவை ஜூன் மற்றும் ஜூலை மாதங்களின் இடைப்பகுதியில் காலாவதியாகிவிடும். எனவே மே மாதம் முதல் வாரம் முதல் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் துரிதமாக ஆரம்பிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்குவதற்கு தற்போது கையிருப்பில் உள்ள அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகள் போதுமானதல்ல என்றும், இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்வதில் சற்று கால தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்தியாவிடம் 15 இலட்சம் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதில் முதற் கட்டமாக 5 இலட்சம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. எஞ்சிய தொகையில் இரண்டரை இலட்சம் தடுப்பூசிகளையேனும் விரைவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கின்றோம். மேலும் இந்தியாவின் சீரம் நிறுவனம் தவிர்ந்த அஸ்ட்ரசெனிகா தடுப்பூசிகளை தயாரிக்கும் ஏனைய நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அஸ்ட்ரசெனிகா மாத்திரமின்றி சீனோபார்ம் , ஸ்புட்னிக் , பைசர் உள்ளிட்டவை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை என்பவற்றின் அனுமதி கிடைத்த பின்னர் அவற்றை கொள்வனவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...