Tamil Leader News
முக்கியம்
65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●நடிகர் சர் பேட்ரிக் ஸ்டுவர்ட் தனது வாழ்வுலக அரங்கிற்கு விடைபெற்றார்!●ஜப்பான் காவலில் உள்ள ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்ணை விடுவிக்கும் முயற்சி!●பிளாஸ்டிக் தேநீர் பைகளால் தேநீர்க் கோப்பையில் கலக்கும் நச்சு இரசாயனங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●
செய்திகள்

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை அழைப்பதாக அரசு அறிவிப்பு!

T

The Leader Desk

ஏப்ரல் 24, 2021 • 2:31 AM

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை அழைப்பதாக அரசு அறிவிப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • சவுதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
  • இதற்கமைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விமானத்தை இலங்கையில் தரையிறக்க அனுமதிப்பது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் நிமல் சிரிபால டி சில்வா கூறியுள்ளார்.
  • இதற்கமைய, சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 இலங்கை பெண்கள் நாட்டிற்கு மீள அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
எழுத்து அளவு:

சவுதி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிரிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை கைதிகளின் விபரங்களை வெளியிட்டதை அடுத்து, சவுதி அரேபியாவில் உள்ள தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை பெண்கள் குறித்து அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள இலங்கை பெண்களை விடுவித்து நாட்டிற்கு விடுவிக்க சவுதி அரசு இணக்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, சவுதி அரேபிய விமான சேவை ஊடாக பெண்களை இலங்கைக்கு அனுப்பிவைக்க சவுதி உறுதியளித்துள்ளது.

இதற்கமைய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விமானத்தை இலங்கையில் தரையிறக்க அனுமதிப்பது குறித்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் நிமல் சிரிபால டி சில்வா கூறியுள்ளார்.

எனினும், சவுதி சட்டத்திற்கு அமைய பெண் கைதிகளை விடுவிப்பது எவ்வாறு என்பது குறித்த தகவல்களை அரசாங்கம் தெளிவுபடுத்தவில்லை.

இலங்கையின் கொரோனா கட்டுப்பாட்டு நடைமுறைகள் மற்றும் சுகாதார பராமரிப்பு வழிகாட்டுதல்களுக்கு அமைய இந்த பெண்களை விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்யுமாறு அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, சவுதி அரேபியாவில் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 156 இலங்கை பெண்கள் நாட்டிற்கு மீள அழைக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

சவுதி அரேபியாவில் இலங்கை பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதற்கான காரணம் குறித்த தகவல்களை அரசாங்கம் வெளியிடவில்லை.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

சவுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களை அழைப்பதாக அரசு அறிவிப்பு! | Tamil Leader | We Lead the Nation