Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●
செய்திகள்

துறைமுக நகர உத்தேச சட்டமூலம் மதங்களுக்கு விரோதமானது என குற்றச்சாட்டு!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2021 • 4:41 PM

துறைமுக நகர உத்தேச சட்டமூலம் மதங்களுக்கு விரோதமானது என குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் காணப்படும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சில் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர், தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
  • குறிப்பாக, 1815 கண்டிய ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு 1972 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சாரம், அடையாளம், பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை இந்த சட்டமூலம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அவதானம் செலுத்தி, 1978 அரசியலமைப்பின் 9ஆவது பிரிவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் கையளித்த கடிதத்தின் பிரதி ஒன்று சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் காணப்படும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சில் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர், தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

“உலக மூலதனத்திற்கு, ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு  மக்களைக் பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை தோற்கடிப்போம்.” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிஸ கட்சி நேற்றைய தினம், புதுக்கடை நீதிமன்றத்தின் முன்னால் போராட்டத்தை நடத்தியது.

மேலும், பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் இந்த குற்றச்சாட்டை பௌத்த அமைப்பான,  தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர் தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின்  9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, 1815 கண்டிய ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு 1972 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சாரம், அடையாளம், பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை இந்த சட்டமூலம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை போசிப்பது மற்றும் பாதுகாப்பது  தொடர்பில்  அரசியலமைப்பில் பல ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், அந்த ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம்  சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

"கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின்  9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மத்திற்கான முன்னுரிமை இழக்கப்படுவதோடு, புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்குமான அரசாங்கத்தின் பொறுப்பை இல்லாமல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது”

அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவிற்கு அமைய, குறித்த சட்டமூலமானது பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை மீறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

"ஒரு நாடு - இரண்டு சட்டங்கள்" என்பதே துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டத்தின் கருப்பொருள் என சுட்டிக்காட்டியுள்ள தேசிய புத்திஜீவிகள் சங்க சபை, நாட்டின் ஒரு பகுதியில் அமுலில் உள்ள கலால், பந்தயம், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு சட்டம் துறைமுக நகரில் அமுல்படுத்தப்படாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக  தேரர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒரு பகுதிக்கு அரசியல் அமைப்பின் ஒன்பதாவது பிரிவின் அழுத்தம் காணப்படுகின்ற நிலையில், துறைமுக நகரம் அந்த சட்டத்திற்கு உட்பட்டதாக  இல்லயென தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது.

"அரசியல் அமைப்பின் 9ஆவது பிரிவின் அழுத்தம் துறைமுக நகருக்கு இல்லாமல் போகிறது”

துறைமுக நகரத்தில் கலால் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், சுங்க பாதுகாப்பு சட்டம், பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம், பொழுதுபோக்கு வரி சட்டம், அந்நிய செலாவணி சட்டம், கெசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் போன்றவற்றை அமுல்படுத்துவதில் இருந்து துறைமுக நகருக்கு விலக்கு அளிக்ப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த கலாச்சாரம் மாத்திரன்றி, இது அனைத்து மதங்களுக்கும் எதிரான விடயமாக அமைந்துள்ளதாக தேசியபுத்திஜீவிகளின் சங்க சபை வலியுறுத்தியது.

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அவதானம் செலுத்தி, 1978 அரசியலமைப்பின் 9ஆவது பிரிவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் கையளித்த கடிதத்தின் பிரதி ஒன்று சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்காக, தற்போதைய அரசாங்கம் சட்டத்தை தீவிரமாக புறக்கணித்து வருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில்  தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

port city protest 6

port city protest 1

 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...