Tamil Leader News
முக்கியம்
விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●விண்வெளிப் படை தூதுக்குழுவின் விஜயத்தால் அரசாங்கத்துக்கு எழும் பாதுகாப்பு அழுத்தங்கள்!●பேட்டரி மறுசுழற்சியின் மறைமுக நச்சு: சிறுவர்களின் உயிர்கள் ஆபத்தில்!●KDU நெருக்கடி: மாணவர்களும் நோயாளர்களும் முகங்கொடுத்துள்ள பாரிய ஆபத்து!●செம்மணி: இலங்கையின் மிகப்பெரிய மனிதப் புதைகுழி குறித்த புதிய அறிக்கைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு!●முன்மொழியப்பட்டுள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு ஐ.நா தரப்பிலிருந்து 9 நிபந்தனைகள்!●ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவி கிறிஸ்டீன் லகார்ட் திடீர் இராஜிநாமா!●தாயைக் காப்பாற்றக் கோடியைக் கொடுத்த மகளுக்கு நேர்ந்த கதி!●முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாசவின் மகன் ரகித்தவின் சொத்துகளை முடக்கம்!●527 அரச நிறுவனங்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்க்கமான நிதி நடவடிக்கை!●
செய்திகள்

அரசிற்குள் பாரிய பிளவு! தென்னிலங்கை அரசியலில் பாரிய நெருக்கடி ஏற்படலாம்!

T

The Leader Desk

ஏப்ரல் 20, 2021 • 11:02 AM

அரசிற்குள் பாரிய பிளவு! தென்னிலங்கை அரசியலில் பாரிய நெருக்கடி ஏற்படலாம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய, எங்கள் மக்கள் கட்சி, ஜனநாயக இடது முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜாதிக காங்கிரஸ், லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை மகாஜன கட்சி மற்றும் ஜாதிக ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.
  • இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 51 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.
  • பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய, எங்கள் மக்கள் கட்சி, ஜனநாயக இடது முன்னணி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, ஜாதிக காங்கிரஸ், லங்கா சமசமாஜ கட்சி, இலங்கை மகாஜன கட்சி மற்றும் ஜாதிக ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கலந்துரையாடலில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டத்திற்கு முன்னர், அமைச்சர்கள் வாசுதேவ, வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து, தங்கள் கட்சிகளின் பிரச்சினைகள் குறித்து இங்கு விவாதிக்க முடியாததால் வேறு திகதியை ஒதுக்கித் தருமாறு கேட்டனர். அவர்களுக்கு இன்னொரு திகதி தருவதாக பிரதமர் உறுதியளித்துள்ளார்.

கட்சி சாராத தலைவர்கள் குழுவை கூட்டத்திற்கு அழைத்ததால் அவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள 51 பிரதிநிதிகள் அழைக்கப்பட்டிருந்தனர்.

பொதுஜன பெரமுனவுடன் 14 அரசியல் கட்சிகள் ஒப்பந்தம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. உலகத் தொழிலாளர் தின நிகழ்வுகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சுகாதார வழிகாட்டுதல்களின்படி மே தின பேரணிகளை நடத்துவதில் கட்சித் தலைவர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

பொதுஜன பெரமுன கொழும்பு மாநகரசபை மைதானத்தில் மே தின பேரணியை நடத்தும், சிறீலங்கா சுதந்திரக் கட்சி மே தின பேரணியை பொரளை கம்ப்பெல் மைதானத்தில் நடத்தும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறீலங்கா சுதந்திரக் கட்சி முன்னதாக பொலன்னறுவையில் மே தின பேரணியை நடத்த முடிவு செய்திருந்தது. பிரதமர் தலைமையிலான கூட்டத்தை புறக்கணித்த மூன்று அமைச்சர்கள் நேற்று காலை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.  

வெகு விவைில் தென்னிலங்கை அரசியலில் பாரிய பிளவு அல்லது நெருக்கடி நிலை ஏற்படலாம்!

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...