Tamil Leader News
முக்கியம்
தேசியப் பூங்காக்களில் பிகினி பிடிப்பு: சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் பாரிய இடைவெளி!●காவன்திஸ்ஸ துயரம்: யானையின் வயிற்றில் ஈயக் குண்டுகள்; விசாரணைகள் CID வசம்!●வீட்டுவசதி நெருக்கடியால் 14 ஆண்டுகளுக்குப் பின் ஸ்பெயினில் மாபெரும் பொது வேலைநிறுத்தம்!●நாடு திரும்புகிறார் அனோஜன் சிவராசா; சவூதியில் மரண தண்டனையிலிருந்து  பூரண விடுதலை!●1990 சுவசரிய சேவைக்கு இந்தியாவிலிருந்து மேலும் 100 நோயாளர் காவு வண்டிகள்; வருகை நேரம் 10 நிமிடங்களாகக் குறைகிறது!●நிதித்துறையில் எழுந்துள்ள புதிய அபாயங்கள் குறித்து மத்திய வங்கியிடமிருந்து விசேட எச்சரிக்கை!●6 மாதங்களில் 271 மில்லியன் நட்டம்: அரச ஊடகங்களுக்கு என்ன நேர்ந்தது?●DIGInote: 2027 வரவு-செலவுத் திட்டம் இன்று நாடாளுமன்றத்தில் - மூலதனச் செலவு 2 ட்ரில்லியன்!●2027 வரவு செலவுத் திட்டம்: இலக்கங்களின் ஸ்திரத்தன்மை மக்களின் பாக்கெட்டுக்குத் தெரியுமா?●இலங்கையின் முதலாவது பயணிகள் ட்ரோன் சோதனை ஓட்டம் இன்று துறைமுக நகரத்தில்!●
செய்திகள்

20 வருடங்கள் எனக்கு வேண்டாம். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்! -சிராஸ் மீராசாஹிப்!

T

The Leader Desk

அக்டோபர் 31, 2024 • 9:02 AM

20 வருடங்கள் எனக்கு வேண்டாம். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்! -சிராஸ் மீராசாஹிப்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பொதுத்தேர்தல் காரியாலய திறப்பு விழா கட்சியின் 3 ஆம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்றிரவு (30) திறந்து வைக்கப்பட்டது.
  • எனக்கு 20 வருடங்கள் வேண்டாம்.
  • இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
எழுத்து அளவு:
முதல்வராக இருந்த காலத்தில் எமது சபையை ஒரு ஊழல்களற்ற மாநகர சபையாகவும் நாட்டிலுள்ள சபைகளைவிட சிறந்தொரு சபையாக மாற்றியமைத்த பெருமை எனக்கும்  உங்களுக்கும் உள்ளது என்று, கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் திகாமடுல்ல மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் 3 ஆம் இலக்க வேட்பாளரும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாய்ந்தமருது பொதுத்தேர்தல் காரியாலய திறப்பு விழா கட்சியின் 3 ஆம் இலக்க வேட்பாளரும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் நேற்றிரவு (30) திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
 
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
நீங்கள் தந்த அமானிதத்தின் மூலம் எனக்குக் கிடைத்த முதல்வர் பதவியின் ஊடாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உதவிகளைப் பெற்றுக்கொண்டு கல்முனை மாநகரத்தை பல்வேறுபட்ட அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள். 
 
IMG 20241031 141732 800 x 533 pixel
 
இன மத வேறுபாடின்றி வாழ்வாதார உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள், திண்மக் கழிவகற்றல் முறையில் எவ்வித தடைகளுமின்றிய நடைமுறை போன்ற பல்வேறுபட்ட விடயங்களைச் செய்ய ஒரு பம்பரம் போன்று இயங்கி வந்ததையும் கண்ணூடாகக் கண்டீர்கள்.
 
எனது இந்த சேவையை அம்பாறை மாவட்டத்திலுள்ள எல்லா மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சிந்தனையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் முடிவெடுத்து இத்தேர்தலில் என்னை களம் இறக்கியுள்ளது. 
 
IMG 20241031 141722 800 x 533 pixel
 
அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன மத வேறுபாடின்றிய சேவைகளை வழங்கி வைக்க ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று நான் கேட்கிறேன். எனக்கு 20 வருடங்கள் வேண்டாம். எனது செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் நீங்கள் அவதானித்து அதன் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.
 
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...