Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய மூன்று எம்.பிக்கள் எதிரணியில்!

T

The Leader Desk

ஏப்ரல் 21, 2022 • 2:14 AM

20வது திருத்தத்திற்கு ஆதரவு வழங்கிய மூன்று எம்.பிக்கள் எதிரணியில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எவ்வாறாயினும் இவர்கள் எதிர்கட்சியில் சுயேட்சையாக செயற்பட போவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக எதிர்கட்சியில் இருந்த குறித்த மூவரும் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.
  • அரசியலமைப்பின் 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது, ​​குறித்த மூவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
  • ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பைசல் காசிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

எவ்வாறாயினும் இவர்கள் எதிர்கட்சியில் சுயேட்சையாக செயற்பட போவதாக அறிவித்துள்ளனர். முன்னதாக எதிர்கட்சியில் இருந்த குறித்த மூவரும் பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் பைசல் காசிம் மற்றும் எம்.எஸ்.தௌபீக் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ரிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி இஷாக் ரகுமான் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

அரசியலமைப்பின் 20வது திருத்தம் மீதான வாக்கெடுப்பின் போது, ​​குறித்த மூவரும் அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அரசாங்கத்திற்கு ஆதரவளித்த குறித்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்தில் இருந்து விலகுவதாக பைசல் காசிம் பாராளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுவேளை, நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் மேலும் நான்கு புதிய இராஜங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில்,

சுரேன் ராகவன் - உயர் கல்வி இராஜாங்க அமைச்சு

வியாழேந்திரன் - இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை

சிவநேசத்துறை சந்திரகாந்தன் - கிராமப்புற வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சு

மொஹமட் முஷாரப் - புடவை  மற்றும் உள்ளூர் ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சு

இதன்படி, தற்போது வரை 28 இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...