Tamil Leader News
முக்கியம்
தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையில் அரசாங்கம் புதிய சட்டமூலங்களைக் கொண்டுவருகிறது●வடக்கு, கிழக்கில் தமிழ் மக்களின் விவசாய மற்றும் மேய்ச்சல் காணிகள் ஆக்கிரமிப்பு: அரசாங்கத்துக்கு சாணக்கியன் எச்சரிக்கை!●திருமண விளம்பரங்களில் சாதியைத் தடை செய்வது ஜனநாயகமா? ●தெற்காசியப் புகைமூட்டத்தால் இலங்கைக்கு ஏற்படும் அபாயமும் தீர்வுகளும்!●நாட்டின் தீர்மானங்களில் மக்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஐ.நா பரிந்துரை!●பொலிஸ் மோப்ப நாய்க் கூண்டுகள் 2க்கு ரூ. 54 இலட்சம்: எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி!●திரிபோசா சோளத் தொகையொன்று 10 மாதங்களாக துறைமுகத்தில் முடக்கம்!●பலாங்கொடை சிசு மரணம்: மருந்து தட்டுப்பாட்டுக்கு பின்னால் உள்ள கண்ணுக்குத் தெரியாத அச்சம்!●20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையோரிடையே HIV தொற்று அதிகரிப்பு!●தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை!●
செய்திகள்

தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை!

Menaka

Menaka

நவம்பர் 26, 2026 • 9:48 AM

தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வடமராட்சியின் பல இடங்களில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் மாவீரர் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
  • பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
  • இதன்போது, வருகை தந்திருந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் மதிப்பளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
  • முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வடக்கு பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(25.11.2026) முள்ளியவளை வடக்கு மக்களின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.
எழுத்து அளவு:

யாழ். வடமராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறிச் செயற்பட்டால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்பாட்டாளர்களுக்குப் பொலிஸாரால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வடமராட்சியின் பல இடங்களில் கடந்த நவம்பர் 21 ஆம் திகதி முதல் மாவீரர் வார நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாளை வெள்ளிக்கிழமை எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் தீருவில் சதுக்கம் உள்ளிட்ட இடங்களில் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன. அத்துடன், இன்று வியாழக்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை முன்னெடுக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொலிஸாருடனான விசேட கலந்துரையாடலும் நிபந்தனைகளும்

இந்நிலையில், வடமராட்சி பிரதேசத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளை முன்னின்று நடத்துகின்ற ஏற்பாட்டாளர்களுடனான விசேட கலந்துரையாடல்கள் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை மாலை பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ளன. பருத்தித்துறை மற்றும் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள ஏற்பாட்டாளர்கள் அந்தந்தப் பொலிஸ் நிலையங்களுக்கு நேரில் அழைக்கப்பட்டு, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள் தலைமையில் இக்கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.

  • அடையாளங்கள் மற்றும் கொடிகளுக்குத் தடை: நினைவேந்தல் நிகழ்வுகளை முன்னெடுப்பதில் எவ்விதத் தடைகளும் இல்லை எனவும், தடை செய்யப்பட்ட அமைப்பின் அடையாளங்கள், கொடிகள் மற்றும் இலச்சினைகள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தாது நினைவுகூர முடியும் எனவும் பொலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஒலிபரப்புக் கட்டுப்பாடு: உணர்வுகளைத் தூண்டும் வகையிலான பாடல்களை ஒலிபரப்பாது, பொதுவான பாடல்களை மாத்திரம் குறைவான ஒலி அளவில் ஒலிபரப்பலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேரடி மற்றும் சமூக வலைத்தளக் கண்காணிப்பு

இந்த நிகழ்வுகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றப்படும் பதிவுகள் மற்றும் காட்சிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன எனப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேரடி மற்றும் சமூக வலைத்தளக் கண்காணிப்பின்போது மேற்குறித்த நிபந்தனைகள் மீறப்பட்டமை கண்டறியப்பட்டால், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்களுக்குப் பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்

மாவீரர் தினத்தை முன்னிட்டு மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வுகள் பிரதேசங்கள் தோறும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதற்கமைய, கிளிநொச்சி - வன்னேரிக்குளம் வட்டாரத்தின் மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோரை மதிப்பளிக்கும் விசேட நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

வன்னேரிக்குளம் வட்டாரப் பகுதியைச் சேர்ந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோரின் தியாகங்களை நினைவுகூர்ந்து அவர்களைக் கௌரவிக்கும் முகமாக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது, வருகை தந்திருந்த மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகளால் மதிப்பளிக்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

26-6b0734e548a7f.webp
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வடக்கு பிரதேசத்தில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று(25.11.2026) முள்ளியவளை வடக்கு மக்களின் ஏற்பாட்டில் உணர்வு பூர்வமாக இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் மாலை அணிவிக்கப்பட்டு, மங்கள வாத்திய இசையுடன் முள்ளியவளை வடக்கு பொதுநோக்கு மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டதனை தொடர்ந்து பொதுச்சுடர் மற்றும் பொது திருவுருவப்படத்திற்கான மலர் மாலையையும் முன்னாள் போராளி அன்பரசன் மற்றும் இரு மாவீரரின் பெற்றோர் அழகன் இரத்தினாம்பாள் ஆகியோரால் ஏற்றி வைத்து மலர் மாலையை அணிவித்ததனை தொடர்ந்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடைபெற்ற நிகழ்வில் கலை நிகழ்வுகளும், மாவீரர்களின் வீரம், தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு தொடர்பான நினைவுரைகளும் இடம்பெற்றன.

26-6b074dce83701.webp
இதன்போது கலந்துகொண்ட மாவீரர் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள் மதிப்பளிக்கப்பட்டு பழமரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர் ஞா.யூட்சன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் இ.ஜெகதீசன், மத குருமார்கள், கிராம மட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோர்கள், பொதுமக்கள், இளைஞர்கள், யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

மதிப்பளிப்பு நிகழ்வை நடத்துவதற்கு முள்ளியவளை வடக்கு கிராம மக்களால் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போது அங்கு வருகை தந்த முள்ளியவளை பொலிஸார் நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் யார் எனக் கேள்வி எழுப்பியதுடன், நிகழ்வை முன்னெடுப்பவர்களின் பெயர் விபரங்களையும் பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிகழ்வுக்காக மண்டபத்தின் முன்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகையில் இடம்பெற்றிருந்த கார்த்திகை மலரை மறைக்குமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.   

26-6b0734e63f4d5.webp
மாவீரர் பெற்றோர் மற்றும் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு நேற்று(25.11.2026) மாலை யாழ். வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழையில் இடம்பெற்றுள்ளது.

சிறுவர்களின் பேண்ட் வாத்திய இசையுடன் பெற்றோர், உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மாவீரரின் தந்தை ஒருவரால் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மலர்மாலை அணிவித்துள்ளார்.

அதன் பின்னர், ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டதுடன், மலர்வணக்கமும் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர். 

26-6b0757ba96dd5.webp

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழர் பகுதிகளில் உணர்வுபூர்வமாகத் தொடரும் மாவீரர் தின நினைவேந்தல்; நிபந்தனைகனை மீறினால் PTA பாயுமென பொலிஸார் எச்சரிக்கை! | Tamil Leader | We Lead the Nation