தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 72ஆவது பிறந்தநாள் நிகழ்வுகளை இன்று வெகுவிமர்சையாக முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகள் வல்வெட்டித்துறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
வடக்கு – கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் மத்தியிலும் இப்பிறந்தநாள் நிகழ்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் விசேட ஏற்பாடுகள்
வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறுவயதில் வாழ்ந்த இடமான வல்வெட்டித்துறை, ஆலடி வீதியிலுள்ள காணியில் பிறந்தநாள் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
-
புனரமைப்பு மற்றும் அலங்காரங்கள்: முன்னதாக, சிரேஷ்ட அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதிக்கிரியைகள் நிறைவடைந்த பின்னர் அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பெயர்ப் பதாகை சேதப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சேதப்படுத்தப்பட்டிருந்த அந்தப் பதாகை மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதுடன், குறித்த காணி சுத்திகரிக்கப்பட்டுச் சிவப்பு, மஞ்சள் கொடிகளுடன் அலங்கார ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
-
நிகழ்வு ஆரம்பம்: அங்கு இன்று முற்பகல் 10 மணிக்குப் பிறந்தநாள் நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளன என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.


