பசில் ராஜபக்ஷவின் அழுத்தத்தின் கீழ் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பல பௌத்த துறவிகள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக அரச உள் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக ஜனாபதிக்கு விசுவாசமாக இருக்கும் பல பௌத்த துறவிகள் இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடாத்த தீர்மானித்துள்ளதாக அறியக்கடைக்கின்றது.

இதற்கிடையில், வார இறுதி பத்திரிகையாக 'அனிதா' செய்தித்தாள் அதனது தலைப்பில், '' மஹிந்த, பசில் ஆகியோருக்கு மாகாண சபை தேர்தல் தேவையாக உள்ள நிலையில் கோதபாய அமைதியாக இருப்பதாக அந்த பத்திரிகை செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ”

அந்த பத்திரிகை அறிக்கையின்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் மாகாண சபைத் தேர்தலை விரைவில் பழைய தேர்தல் முறையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதில் பிடிவாதமாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி