Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

18 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்! - சவப்பெட்டியை எரித்து எதிர்ப்பை காண்பித்த மக்கள்

T

The Leader Desk

ஏப்ரல் 26, 2022 • 4:42 AM

18 ஆவது நாளாக தொடரும் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம்! - சவப்பெட்டியை எரித்து எதிர்ப்பை காண்பித்த மக்கள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக போவதில்லை என அறிவித்திருந்தனர்.
  • குறித்த போராட்டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து செல்ல உத்தரவிடுமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 25) நிராகரித்தது.
  • எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அலரிமாளிகைக்கு முன்னால் நடைபாதையில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் விசனம் வெளியிட்டதோடு கொள்ளுப்பிட்டி பொலிஸிலும் முறைப்பாடு செய்ய முற்பட்டனர்.
எழுத்து அளவு:


எனினும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக போவதில்லை என அறிவித்திருந்தனர்.
இந்நிலையில் கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்பாக ' மஹிந்த கோ கம ' எனும் பெயரில் மற்றும் ஒரு போராட்டத்தில் மக்கள் முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக தெரிவித்து போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து செல்ல உத்தரவிடுமாறு கொள்ளுப்பிட்டி பொலிஸார் முன் வைத்த கோரிக்கையை கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 25) நிராகரித்தது.

இந்நிலையில், கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ' மஹிந்த கோ கம ' எனும் பெயரில் இரவிரவாக போராட்டம் இடம்பெற்று வந்தது.

May be an image of 7 people, people standing and outdoors

எனினும் ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அலரிமாளிகைக்கு முன்னால் நடைபாதையில் பொலிஸ் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் விசனம் வெளியிட்டதோடு கொள்ளுப்பிட்டி பொலிஸிலும் முறைப்பாடு செய்ய முற்பட்டனர்.

முறைப்பாடு பெற்றுக்கொள்ள பொலிஸார் மறுத்துள்ள நிலையில் அங்கு பொலிஸாருக்கும் பொது மக்களுக்கும் முறுவல் நிலை ஏற்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் பொலிஸாரிக் தடைகளையும் அரசின் அழுத்தங்களையும் மீறி நேற்றையதினம், பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த பெருமளவான அதிபர் ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, குறித்த போராட்டத்தில் சவப்பெட்டிகளை ஏந்தி வந்த அகில இலங்கை விவசாய போதனாசிரியர்கள் சங்கத்தினர் இணைந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன் பின்ன குறித்த சவப்பெட்டியை போராட்டக்களத்தில் எரித்து தமது எதிர்ப்பை மேலும் வெளிப்படுத்தினர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...