Tamil Leader News
முக்கியம்
பிரித்தானியாவில் நிரந்தர வசிப்பிடக் காலம் இருமடங்காக அதிகரிப்பு: பராமரிப்பு ஊழியர்களுக்கு நிவாரணம்!●3 தசாப்தங்களுக்குப் பின் சாஃப் நம்பிக்கை: இலங்கை கால்பந்து அணி பங்களாதேஷில்!●தென்னிந்திய சினிமாவைக் கலக்கும் ரஜினியின் 'ஜெயிலர் 2' 800 கோடி எல்லை இலக்கைத் தாண்டியது!●லொத்தர் சபை வழக்கு: ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!●மெர்லின் மன்றோ; உண்மையான அன்பைத் தேடிய சோகமான வாழ்க்கைப் பயணம்!●59 மில்லியன் ரூபாய் பண மோசடி வழக்கிலிருந்து டேசி ஃபொரெஸ்ட் விடுவிப்பு!●பெண்களின் இதயத்தைப் பாதுகாக்கும் புதிய மருத்துவப் பாதை!●அடக்குமுறைச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: நாளை (04) பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம்!●16 வயது சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடை!●கிரிஷ் வழக்கில் பிணை கிடைத்தாலும் நாமல் தொடர்ந்தும் சிறையில்!●
செய்திகள்

நான்கு மாத கர்ப்பிணி உட்பட 18 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!

T

The Leader Desk

ஏப்ரல் 22, 2022 • 3:07 AM

நான்கு மாத கர்ப்பிணி உட்பட 18 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இவர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சென்று இறங்கினர்.
  • இதேபோல் வியாழக்கிழமை மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்தனர்.
  • எவ்வாறாயினும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 18 இலங்கையர்களையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 60 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்ஞம் புகுந்துள்ளனர்.
எழுத்து அளவு:


வியாழக்கிழமை காலை ஆறு மணிக்கு மன்னார் மாவட்டம் பேசாளை கடற்கரையிலிருந்து இரண்டு படகுகளில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீப், கஸ்தூரி, சுமித்ரா, நகுஷன், பியோனா, நகுலேஸ்வரன் என நான்கு மாத கர்ப்பினி பெண், ஒன்றரை வயது சிறுவன் உட்பட மூன்று குடும்பத்தை சேர்ந்த 13 பேர் தமிழகத்திற்கு படகில் பயணித்துள்ளனர்.

இவர்கள் வியாழக்கிழமை இரவு 10 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் சென்று இறங்கினர்.
இதேபோல் வியாழக்கிழமை மதியம் யாழ்பாணம் மாவட்டம் நீர்வேலி பகுதியில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பேச்சாலை கடற்கரையில் இருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற ராமேஸ்வரம் மரைன் போலிஸார் அவர்களை மீட்டு மண்டபம் கடலோர காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தனது நான்கு மாத கர்ப்பிணி மனைவி பாதுகாப்பாக குழந்தை பிறசவிக்க வேண்டும் என்பதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய விசாரணையில் கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் நகுஷன் தெரிவித்துள்ளார்.

தற்போது பால்மாவு மற்றும் கோதுமையின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் தனது ஒன்றரை வயது சிறுமியை வைத்து இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் உணவு பஞ்சம் ஏற்படும் என்ற அச்சத்தில் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தான் தமிழகத்திற்கு குடும்பத்துடன் அகதியாக வந்ததாக சிறுமியின் அப்பா பிரதீப் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் பாதுகாப்பு அதிகாரிகள் விசாரணைக்கு பின் இந்த 18 இலங்கையர்களையும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22ம் திகதி முதல் இன்று வரை 60 இலங்கையர்கள் அகதிகளாக தமிழகத்தில் தஞ்ஞம் புகுந்துள்ளனர்.

தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

இதன் காரணமாக எதிர்காலத்தில் உணவு பஞ்சம் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டும் என்ற அச்சமும் நிலவிவருகின்றது.
இந்நிலையிலேயே, இலங்கை தமிழர்கள் இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் உள்ள தீவிர கண்காணிப்பையும் மீறி பைப்பர் படகுகளில் தனுஷ்கோடிக்கு அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர்.

எனினும் இந்திய அரசு இவ்வாறு இலங்கையர்கள், அகதிகளாக தஞ்சம் புகுவதை தவிர்க்கும் வகையில் கடற் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

https://bit.ly/3uHGkH6

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நான்கு மாத கர்ப்பிணி உட்பட 18 இலங்கையர்கள் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சம்! | Tamil Leader | We Lead the Nation