கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்நாட்டிற்கு வர வேண்டுமெனக் கேட்ட வெளிநாட்டிலுள்ள ஆயிரக்கணக்கான இலங்கை உழைப்பாளிகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் சௌதி அரேபியாவிற்கு உழைப்பாளிகளை மீண்டும் அனுப்பத் தொடங்கியுள்ளது.

இதன் ஆரம்பக் கட்டமாக நேற்று (28) அதிகாலை 60 ஆண் பணியாளர்கள் சௌதி அரேபியாவிற்குச் சென்றுள்ளனர்.

கொரோனா பெருந்தொற்று ஆரம்பக் கட்டத்தில் தொழில் ஒப்பந்தக் காலம் முடிவடைந்தமை, தொழில் செய்யும் இடங்களில் இன்னல்கள் காரணமாக தப்பியோடியமை, நோயாளிகளாக ஆகியமை போன்ற காரணிகளால் தொழில் இழந்தவர்கள் மற்றும் சட்டரீதியாக இந்நாட்டிற்கு திரும்பி வரக் கூடிய ஆயிரக்கணக்கானோர் கடந்த மார்ச் மாதம் தமது கஷ்டங்களை அரசாங்கத்திடம் கூறி தம்மை இந்நாட்டுக்கு வரவழைக்குமாறு கோரினர்.

இன்றைய நிலையில் கொரோனா தொற்றினால் 100க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் வெளிநாடுகளில் மரணித்துள்ளனர்.

எவ்வாறாயினும், பெருந்தொற்று காலத்தில் விமானப் பயணங்கள் நிறுத்தப்பட்டிருந்தமையால் அவர்களை இநநாட்டுக்கு வரவழைக்க முடியாத போதிலும், பெருந்தொற்று காலத்தில் தனிமைப்படுத்தல் வசதிகள் குறைவாக இருந்தமையால் அழைத்து வர முடியாதெனக் கூறி அரசாங்கம் கடந்த 10 மாத காலமாக அந்த இலங்கையர்களை கவனிக்காது விட்டிருந்தது.

அக்காலத்தில் சௌதி அரேபியால் உள்ள வெளிநாட்டு உழைப்பாளிகளை தமது நாட்டுக்கு வரவழைப்பதும் நிறுத்தப்பட்டிருந்தது. சௌதி அரேபியாவிலிருந்து வெளிநாட்டு உழைப்பாளர்கள் கடந்த சில நாட்களாக வரத் தொடங்கியுள்ளனர்.

இதற்கிடையே, வெளிநாடுகளில் பணியாற்றும் உழைப்பாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமை, உடல் மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள், உரிமைகள் மீறப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பேற்காமை போன்றவற்றுக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஏஜன்சிகளிடம் முறையிட்ட போதிலும் எந்த வித பதிலும் கிடைக்கவில்லை.

ஆனால் வெளிநாடுகளுக்கு அனுப்பும் போது தொழில் ஏஜன்ஸிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அமைச்சர் தலையிட்டு எடுக்கப்பட்ட நடவடிககை காரணமாக புதிதாக நபர்களை அனுப்ப தொழில் ஏஜென்ஸிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் கூறுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி