1200 x 80 DMirror

 
 

இலங்கையில் பெண்கள் வெளி நபர்களைவிட, தமக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து இரு மடங்கு உடல் ரீதியான துஷ்பிரயோகங்களை அனுபவிக்கின்றமை தெரியவந்துள்ளது.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகள் குறித்து இலங்கையின் சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் முதலாவது தேசிய கணக்கெடுப்பு மூலம் இந்த அதிர்ச்சியூட்டும் தகவல் தெரியவந்துள்ளது.

"தயவுசெய்து நாங்கள் வாழும் நரகத்திலிருந்து எங்களை காப்பாற்றுங்கள்" என கணக்கெடுப்பில் பங்கேற்ற ஒரு பெண் ஒரு அதிகாரியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த வன்முறை பெண்களின் கடுமையான பொருளாதார மற்றும் சமூக ஒடுக்குமுறையை அடிப்படையாகக் கொண்டது என்பதை 220 பக்க அறிக்கை வெளிப்படுத்துகிறது.

2006 சனத்தொகை மற்றும் சுகாதார கணக்கெடுப்பு அறிக்கையை நினைவு கூர்ந்த புதிய கணக்கெடுப்பு, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களுக்காக மனைவிமார் தாக்கப்படுவதாக, நாட்டின் சில மாவட்டங்களில் வாழும் 54 வீதமான பெண்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

அறிக்கைக்கு  அமைய, பொருளாதார மற்றும் சமூக மட்டத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள், துணைவர் மற்றும் குடும்ப ஆண்களால் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

ஒவ்வொரு ஐந்து வாழ்க்கைத் துணைகளில் ஒருவர், விகிதாசார அடிப்படையில் 20.4 வீதமான பெண்ள், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் கணவரால் உடல் ரீதியாக அல்லது பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றார்.

இந்த வாழ்க்கைத் துணைகளில் ஆறு சதவீதம் பேர் கடந்த 12 மாதங்களில் உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்தை அனுபவித்துள்ளனர்.

அதே நேரத்தில், 10 பெண்களில் ஒருவர்,  விகிதாசார அடிப்படையில் 7.2 வீதமானவர்கள், நெருக்கமானவர்கள் அல்லாதவர்களின் கைகளால் உடல் அல்லது பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

கடந்த 12 மாதங்களில், 1.2 வீதமான பெண்கள் நெருக்கமானவர்கள் அல்லாதவர்களிடமிருந்து வன்முறையை அனுபவித்திருக்கிறார்கள்.

24.9 வீதமான பெண்கள் துணைவர் மற்றும் உறவினர் அல்லாதவர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை ஆய்வில் மேலும் தெரியவந்துள்ளது.

உறவில் இருக்கும் 18.8 வீதமான பெண்கள் தங்கள் வாழ்நாளில் உறவில் இருந்தவர்களால் ஒருவித உடல்  அல்லது பாலியல் துஷ்பிரயோகங்களை அனுபவிப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களின் நல்வாழ்வு கணக்கெடுப்பு என அழைக்கப்படும் இந்த கணக்கெடுப்பு, பெண்களின் நல்வாழ்வை அளவிடுவதில் தனிப்பட்ட பாதுகாப்பு, பின்னணி, பொருளாதார பாதுகாப்பு, சொத்து மற்றும் வளங்களுக்கு சம வாய்ப்புகள், தீர்மானம் எடுப்பது, அரசியல் பங்கேற்பு, சுகாதாரம் வேலை வாய்ப்புகள் போன்றவற்றை அளவிடுவதில் மிகமுக்கியமான விடயமாக கருதப்படுகின்றது.

பொருளாதார வன்முறை

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வீட்டு வன்முறை அதன் தீவிர பொருளாதார நன்மைகளை அடையும் வரை நீடிக்காது என்பதைக், இந்த கணக்கெடுப்பின் கண்டுபிடிப்புகள் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களை விட பெண்கள் வேலை செய்வது குறைவு என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

2018வரை இலங்கையில் பெண்களின் தொழிலாளர் பங்களிப்பு விகிதம் மொத்த மக்கள் தொகையில் 33.6% மாத்திரமே.

பொருளாதார ரீதியாக சுறுசுறுப்பான மக்கள் தொகை 8.6 மில்லியன்களாகும். ஆனால் 35%வீதமான பெண்கள் மாத்திரமே வேலை செய்கிறார்கள். இந்த விகிதம் சில காலமாக தேக்க நிலையில் உள்ளது.

ஆண்களுடன் ஒப்பிடும்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெண்கள் 41%  மாத்திரமே.

அறிக்கைக்கு அமைய, ஆண்களின் மொத்த தேசிய வருமானம் 16,852 டொலர்கள் எனவும், பெண்களின் வருமானம் 6,766 டொலர்கள் மாத்திரமேஎனவும், இது மிகப்பெரிய இடைவெளியை காட்டுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட நாடு, தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,853 அமெரிக்க டொலர்களாகும்.

ஆனால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஆயுட்காலம் பெண்களுக்கு சாதகமான விகிதத்தில் காணப்படுகின்றது.

சமமற்ற பாலினம்

2015 தேர்தலின் போது, நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் 5% ஆக காணப்பட்டது. ஏனைய சட்டரீதியான நிறுவனங்களிலும் இதே நிலைதான்.

பெண்களுக்கு சமமான அந்தஸ்தை அடைய பொருளாதார மற்றும் முடிவெடுக்கும் சக்தி இல்லை.

பெண்களுக்கு எதிரான வன்முறையின் நன்மைகள்

பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட வன்முறையின் விளைவாக பெண்கள் தங்கள் உடல்களைப் பற்றி தீர்மானிக்கும் உரிமையை இழக்கும் சூழ்நிலையையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.

இந்த சூழ்நிலையின் பயனாளிகள் பணியிடத்திலும், கல்வி நிறுவனங்களிலும், அண்டை வீடுகளிலும் அச்சுறுத்தல் மற்றும் வற்புறுத்தலின் மூலம் எவ்வாறு செயற்படுகிறார்கள் என்பதையும் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது.

பாலியல் பலாத்காரம், பாலியல் வன்முறை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் கடத்தல், கட்டாய விபச்சாரம் போன்ற பெண்களுக்கு எதிரான பொது வன்முறைகளை அடிப்படையாகக் கொண்ட பாலியல் மற்றும் வணிக வெகுமதிகளின் பாவமான சமூக நடைமுறைகளை இந்த அறிக்கை வெளிப்படுத்துகின்றது.

               

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி