இலங்கையின் பிரதான பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் ஐவரும் ஒரு பெண்ணும்
இந்தோனேசியாவில் அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க உள்ளிட்ட 6 பாதாள உலக குழுவினர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் சர்வதேசப் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான திரு. எஃப். யூ. வுட்லர் தெரிவித்தார்.