யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்றைய அகழ்வின் போது புதிதாக 16 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அத்துடன் ஆடை ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத் தில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 34ஆம் நாள் அகழ்வு நேற்று இடம்பெற்றது.
நேற்றைய அகழ்வில் 16 மனித என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள் ளன. இதன்மூலம் செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள மனித என்புத் தொகுதிகளின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் இந்தப் புதைகுழியில் இருந்து ஆடை ஒன்றும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளது