இந்நாட்டில் ஆண்களின் சனத்தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கும் என வயம்ப பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில தெரிவித்துள்ளார்.
1995ஆம் ஆண்டில், 100 பெண்களுக்கு 100.2 ஆண்கள் என்ற அடிப்படையில் இருந்ததாகவும், தற்போது இது 100 பெண்களுக்கு 93.7 ஆண்களாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பெண்களின் ஆயுட்காலம் அதிகரிப்பு, பெண் பிறப்புவீதம் அதிகரிப்பு, இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு இடம்பெயர்தல் போன்ற காரணங்களால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
"பொறியியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற ஒன்று அல்லது இரண்டு பெரிய பட்டங்களைத் தவிர்ந்த அனைத்து துறைகளிலும் அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பணியில் சேருகிறார்கள். இந்த ஏற்றத்தாழ்வு, அதாவது பெண்களும் ஆண்களும் சமநிலையில் இல்லாவிட்டால், பல விளைவுகள் ஏற்படலாம். முக்கியமாக இது தொழிலாளர் மற்றும் அதன் உற்பத்தித்திறனை எவ்வாறு பாதிக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.
“ஆண்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட பல வேலைகள் உள்ளன. அந்த வேலைகளைச் செய்ய போதுமான ஆண்கள் தொகை இல்லை என்றால், நாங்கள் பெரிய நெருக்கடிக்கு செல்ல நேரிடும். இது தொடர்பில் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
"பெண்களுக்கு போதிய ஆண்கள் இல்லை என்றால், திருமண விடயத்தில் பாரிய பிரச்சினை ஏற்படும். காரணம், நாட்டிலுள்ள அழகான, பணக்காரப் பெண்களுக்கு ஏற்ற திறமையான ஆண் கிடைப்பது பெரிய பிரச்சினை இல்லை. ஆனால், கிராமப்புற ஏழைப் பெண்களுக்கு ஆண்கள் கிடைப்பது கடினம். இது எப்படி நாட்டை பாதிக்கிறது, இதற்கு என்ன தீர்வு என்பதை, இன்றைய தலைமுறையினக்காக அரசாங்கள் விரைவில் தீர்வைக் கண்டுபிடிக்க வேண்டும்” என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.