இலங்கையில் நிலவிய யுத்தக்கால சூழ்நிலைக்குப் பின்னர், நாட்டு இராணுவத்தில் எவ்வித
முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஃபீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தேசிய இராணுவ நினைவு தினத்தை முன்னிட்டு, அத தெரண Big Focus விசேட நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக்காலத்தில் இருந்த யுத்த தாங்கிகள் பல தற்போது சேதமடைந்துள்ளதாக கூறினார்.
"யுத்தம் நிறைவநை்த பின்னர் 16 ஆண்டுகள் கடந்துள்ள போதும் இராணுவத்தின் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்பட்டதாக என் மனசாட்சிக்கு ஒப்புக்கொள்ள முடியாது. ஒரு உதாரணம் சொல்கிறேன்: நான் யுத்தம் நடத்திய காலத்தில் என்னிடம் 80 யுத்த தாங்கிகள் இருந்தன. யுத்தம் முடிந்த பின்னர் அவை 30 ஆகக் குறைந்தன, 50 தாங்கிகள் அழிந்துள்ளன. இப்போது இராணுவத்திடம் 30 யுத்த தாங்கிகள் மட்டுமே உள்ளன. படைப்பிரிவுகளுக்கு யுத்த தாங்கிகள் தேவை. வீரர்கள் மட்டும் இருந்தால் போதாது, ஒரு ஆயுதப்படை பிரிவுக்கு ஆயுதங்கள் தேவை.
அழிக்கப்பட்ட 50 யுத்த தாங்கிகளுக்கு பதிலாக 50 புதியவை கொண்டுவரப்பட வேண்டும். ஆனால், அதற்கு எவ்வித ஆர்வமும் எடுக்கப்படவில்லை. புலனாய்வு தொடர்பான அனைத்தையும் அரசாங்கம் கவனிக்க வேண்டும். நான் ஒரு இலட்சத்து ஆறாயிரம் பேர் கொண்ட இராணுவத்திற்கு வழங்கிய பட்ஜெட்டை வைத்தே, இரண்டு இலட்சம் பேர் கொண்ட இராணுவத்தையும் பராமரித்தேன். இதன் மூலம் செலவுகளைக் குறைக்க முடியும் என்று கூறவில்லை."
இலங்கையின் பொருளாதார நிபுணர்கள் சிலர் இராணுவம் மிகப் பெரியது, செலவுகளைக் குறைக்க வேண்டும் எனக் கூறுவதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், அத்தகைய மனநிலையுடன் இராணுவத்தையும் பாதுகாப்பையும் பார்க்க முடியாது. இவை உலகின் மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழில்நுட்ப ரீதியாகவும், பயிற்சி அடிப்படையிலும் முன்னேற்றப்பட வேண்டும்."