நாட்டில் நிலவும் உப்புத் தட்டுப்பாடு, பேக்கரி உற்பத்தியாளர்களையும் ஹோட்டல் துறையையும்
கடுமையாகப் பாதித்துள்ளதென, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன கூறுகிறார்.
பேக்கரிகள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள், பல்பொருள் அங்காடிகளில் இருந்து உப்பு சேகரிப்பதில் நேரத்தை செலவிட வேண்டியுள்ளது. அதே போல் தொழிலாளர்கள் மற்றும் வாகனங்களை இடத்திலிருந்து இடத்திற்கு உப்பு சேகரிக்க அனுப்ப வேண்டியுள்ளது.
ஒரு பெரிய அளவிலான பேக்கரி உரிமையாளரின் தினசரி உப்பு தேவை இருநூறு கிலோகிராமைத் தாண்டியுள்ளதாகவும் இந்த உப்பு சேர்ப்பதால், எதிர்காலத்தில் பொதுமக்கள் பரவலான உப்பு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் அவர் கூறினார்.