இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்பில்,

குறிப்பாக ஐசிசிபிஆர் என்ற சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டத்தின் பிரிவு 3, தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தப்படுவது குறித்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, தமது கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

ஆணைக்குழு பேச்சாளர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்புப் பிரிவின் இயக்குநரான நிஹால் சந்திரசிறி இந்த அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

வன்முறையைத் தூண்டுவதைத் தடுப்பது என்ற போர்வையில், போராட்டங்கள் உட்பட அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளில் பங்கேற்போரைக் கைது செய்வது தொடர்பாக, 2024 மே மாதத்தில், பதில் பொலிஸ் அதிபருக்கு, இந்த அதிருப்தி தெரிவிக்கப்பட்டதாக பேச்சாளர் நினைவு கூர்ந்துள்ளார்.

குறிப்பாக 2009ஆம் ஆண்டு ஆயுத மோதலின் போது இறந்த தமிழ் பொதுமக்களை நினைவுகூரும் இந்த நினைவேந்தல்கள், தவறாக குற்றமாக்கப்பட்டுள்ளன என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைதியான போராட்டங்களை நடத்துவது உட்பட அமைதியான நினைவேந்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை கைது செய்வதற்காக, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் எண் கொண்ட சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் பிரிவு 3 ஐ தவறாகப் பயன்படுத்துவது குறித்து கவலை கொண்டுள்ளதாக ஆணைக்குழு பேச்சாளர் கூறியுள்ளார்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 106(1) இன் கீழ், இதுபோன்ற நிகழ்வுகளை நிறுத்துவதற்கு பொலிஸ் தரப்பு தற்காலிக நீதிமன்ற உத்தரவுகளை கோரி வருகின்றன.

எனினும் அமைதியான முறையில் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், நீதித்துறையால் இந்த விண்ணப்பங்களில் சில நிராகரிக்கப்பட்டன என்றும் ஆணைக்குழு பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தில், குடிமக்களுக்கு வழங்கப்படும் அரசியலமைப்பு பாதுகாப்புகளை வலியுறுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர், அமைதியான நினைவுச் செயல்களை பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டும் வடிவங்களாகக் கருத முடியாது என்று குறிப்பி;ட்டுள்ளார்.

அத்துடன், அவை இலங்கை அரசியலமைப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையின் கீழ் பாதுகாக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2018ஆம் ஆண்டின் 34ஆம் எண் இழப்பீடு அலுவலகச் சட்டத்தின் கீழ் கூட்டு இழப்பீடு பெறுவதற்கான உரிமையை மதித்து பாதுகாக்க இலங்கை அரசுக்கு ஒரு சட்டப்பூர்வ கடமை உள்ளது என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெளிவுபடுத்தியுள்ளார்.

எனவே குறித்த விடயங்களை கருத்தில் கொண்டு, அமைதியான நினைவேந்தலை ஒரு சட்டப்பூர்வ மற்றும் பாதுகாக்கப்பட்ட நடவடிக்கையாக அங்கீகரித்து, இலங்கை பொலிஸின் அனைத்துப் பிரிவுகளுக்கும் மூன்று மொழிகளிலும் தெளிவான வழிகாட்டுதலை வெளியிடவேண்டும் என்று ஆணைக்குழு பேச்சாளர் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன் மூலம், நிர்வாகப் பிரிவுகளில் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகள் எந்தவொரு அமைதியான நினைவேந்தல் செயல்களையும் தடுக்க நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் ஆணைக்குழுவின் பேச்சாளர் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

மெலும், அமைதியான நினைவு நிகழ்வுகளில் தலையிட மாட்டோம் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நவம்பர் 2024இல் அளித்த உறுதிமொழியைத் தொடர்ந்து, HRCSL இன் தலையீடு வந்துள்ளது.

இந்த உத்தரவாதம் இருந்தபோதிலும், பொலிஸாரின் நடவடிக்கைகள் அந்தக் கொள்கைக்கு முரணானதாகக் கூறப்படுகிறது.

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி