தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலம் உள்ளது என்றும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம்

உள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகின்றார் என்று  இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குற்றஞ்சாட்டினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் 60 வருட நிறைவையொட்டி நேற்று புதன்கிழமை கொழும்பு - விஹாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றியிருந்தார்.

இந்த உரை குறித்து தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும் பதில் பொதுச்செயலாளருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் குறிப்பிட்டுள்ள சுமந்திரன்,

“தங்களிடம் முன்றிலிரண்டு பெரும்பான்மை இருப்பதாகவும், தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி மிரட்டுகின்றார். அதிகாரம் கெடுவிக்கும்; முழுமையான அதிகாரம் முற்றிலும் கெடுவிக்கும். யாழ்ப்பாண மாநகர சபையில் 10/41 பெரும்பான்மை என்று சொல்லும்போது அவரது கணிதத் தகைமை வெளிப்படுகின்றது" என தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி