புதிய பாப்பரசர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதை அடையாளப்படுத்தும் விதமாக, வத்திக்கானில்
உள்ள சென்ட் பீட்டர்ஸ் பசிலிக்காவின் புகைபோக்கியில் இருந்து வெள்ளை புகை வெளியேறியுள்ளது.
அதன்படி, அடுத்த ஒரு மணி நேரத்தில் புனித பீட்டர் சதுக்கத்திற்கு மேலே உள்ள பால்கனியில் புதிய பாப்பரசர் தோன்றுவார் என்று வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சென்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் கூடியிருக்கும் கூட்டம் ஆரவாரம் செய்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.