சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும்

23 வயதுடைய சரித் தில்ஷான் மாணவனின் திடீர் மரணம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தால் தங்களது விரிவுரையாளர்கள் சம்மேளனம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் செயலாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான சாருதத்த இளங்கசிங்க கருத்து வௌியிடுகையில், இந்த துயர சம்பவத்திற்கு பகிடிவதையே காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பொறியியல் பீடத்தில் இரண்டாம் ஆண்டு படிக்கும் 23 வயதுடைய சரித் தில்ஷான் திடீர் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இதனைத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இது ஒரு புதிய சம்பவம் என்ற குற்றச்சாட்டு இருப்பதால், இந்த விடயத்தில் குறுகிய நோக்கங்கள் இல்லாமல் முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

மேலும், குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு நாங்கள் முழு ஆதரவையும் வழங்குவோம் என்றும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி