ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு விசேட பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
கிறிஸ்தவ பக்தர்களின் ஈஸ்டர் பண்டிகை 2025.04.18 மற்றும் 2025.04.20 ஆகிய தேதிகளில் நடைபெறுவதால், அந்த நாட்களில் பக்தர்களின் பாதுகாப்பிற்காக சிறப்பு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளது.
இது தொடர்பாக, பதில் ஐஜிபி-சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, அனைத்து மாகாணங்களுக்கும் பொறுப்பான மூத்த டிஐஜிக்கள், பொறுப்பான பிரிவு அதிகாரிகள் உட்பட அனைத்து பொலிஸ் ஓஐசிகளுக்கும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் வருகை தரக்கூடிய தேவாலயங்களைக் கண்டறிந்து, அந்த இடங்களிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் பாதுகாப்பை உறுதி செய்யவும், முக்கிய மத போதனைகள் நடைபெறும் தேவாலயங்களில் அதிக கவனம் செலுத்தி, பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவும் பொறுப்பு அறிவுறுத்தியுள்ளார்.
இதற்காக பொலிஸ் அதிகாரிகள், விசேட அதிரடிப்படை மற்றும் முப்படை அதிகாரிகளை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.