சித்திரைப் புத்தாண்டுக் காலத்தில் சூரியனின் இயக்கம் காரணமாக பல பகுதிகளில் வெப்பமாக

இருக்கும் அதேநேரம், நாட்டின் சில பகுதிகளில் மழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து புத்தாண்டு (14.04.2025) வரை சூரியன் இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இந்நிலையில் சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (12) நண்பகல் 12.11 அளவில் ஆடியகுளம், வேப்பங்குளம், பதவிய மற்றும் குச்சவெளி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

இதேவேளை மத்திய, சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல் மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடுவதுடன், மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.       

devikusumasana
bahuchithawadiya

 

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

 

Pulseline Logo web

 

Pulseline Logo web

Web benner English NEW

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி