அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் 125

சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

மேலும், இலங்கை உள்ளிட்ட ஏனைய நாடுகளுக்கு கடந்த 2ஆம் திகதி அமெரிக்கா அறிவித்த புதிய வரி விதிப்பை 90 நாட்களுக்கு இடைநிறுத்தி வைக்க தீர்மானித்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

சீனாவைத் தவிர, அனைத்து நாடுகளின் பொருட்களுக்கும் தற்போது 10% உலகளாவிய வரி விதிக்கப்படும் என வௌ்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்தார்.

முன்னதாக, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான வரிகளை இரட்டிப்பாக்கியதைத் தொடர்ந்து அதற்கு பதிலடி வழங்கும் வகையில் சீனா இன்று அமெரிக்க பொருட்களுக்கு 84 வீத வரி விதிப்பை அமுல்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து தற்போது அமெரிக்கா சீன பொருட்களுக்கான வரியை ​125 வீதமாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web