சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கைக்கான புதிய தூதுவராக இவான் பாபகேர்ஜியோ (Evan Papageorgiou) நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையில் சர்வதேச நாணய நிதியத்தின் பணியின் தலைவராக சிறிது காலம் பணியாற்றிய பீட்டர் பிரூயரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்தே, இந்தப் புதியவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது.
2022 - 2023 காலகட்டத்தில், இலங்கை அதன் வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, இலங்கை மீண்டும் ஒரு சர்வதேச நாணய நிதியத் திட்டத்திற்கு ஏற்ப நடவடிக்கை எடுத்தது. இந்நிலையிலேயே, நிதியத்தின் பணித் தலைவராக பீட்டர் பிரூவர் தனது பணியைத் தொடங்கினார்.
அந்தச் செயற்பாட்டின் வெற்றிகரமான முதல் படியாக, மார்ச் 2023இல் இலங்கைக்கு கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் விரிவான கடன் வசதி அங்கீகரிக்கப்பட்டது. மேலும் திட்டத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக முதல் மூன்று மதிப்பாய்வுகளை மேற்பார்வையிட்டதற்கு பிரூவர் தலைமை தாங்கினார்.
சர்வதேச நாணய நிதியத்தின் புதிய புதிய தூதுவராகப் பொறுப்பேற்ற இவான் பாபஜியோர்ஜியோ, அவர் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் துணைத் தலைவராகப் பணியாற்றினார். மேலும், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதாரக் கொள்கை மற்றும் செயற்பாடுகளில் விரிவான அனுபவத்தைக் கொண்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் (IMF) இடையிலான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) நான்காவது மதிப்பாய்வு தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் நேற்று (07) கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
இலங்கையின் புதிய தூதரகத் தலைவர் இவான் பாபஜியோர்ஜியோ மற்றும் பதவி விலகும் தூதர் பீட்டர் பிரூவர் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.