குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
குருநாகல் பொலிஸ் பிரிவின் குருநாகல்-கொழும்பு வீதியில் உள்ள வெஹர பகுதியில் உள்ள பெற்றோல் நிரப்பு நிலையத்தில் இருந்து லொறிக்கு கேஸ் சிலிண்டர்களை ஏற்றும்போது, அந்தச் சிலிண்டர்கள் வெடித்தலில், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர் உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (07) இரவு 11 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குருநாகல் மாநகர சபையின் தீயணைப்பு பிரிவு இணைந்து தீயை கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று இரவு கேஸ் நிரப்புவதற்காக வந்த லொறி ஒன்றுக்கு எரிவாயு சிலிண்டர்களை நிரப்பும் போது இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக குருநாகல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.