விற்பனைக்கு டெண்டர் கோரப்பட்ட பாராளுமன்ற சொகுசு வாகனங்களை வாங்குவதற்கு,
இதுவரை பொருத்தமான கொள்வனவாளர்கள் எவரும் முன்வரவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பல கொள்வனவாளர்கள் முன்வந்திருந்தாலும், அவர்கள் அனைவரும் மதிப்பிடப்பட்ட விலையை விடக் குறைந்த விலையிலேயே அவ்வாகனங்களைக் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பிடப்பட்ட விலையில் வாகனங்களை வாங்க எவரும் முன்வரவில்லை என்றால், மீண்டும் டெண்டர்கள் கோர வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.
பாராளுமன்ற அவைத் தலைவரின் செயலகத்திற்குச் சொந்தமான இரண்டு V8 மற்றும் மிட்சுபிஷி மொன்டெரோ ஜீப்களை விற்பனை செய்வதற்கான டெண்டர்கள் கோரப்பட்டன.
பாராளுமன்றத்தில் உள்ள மற்ற சொகுசு வாகனங்களும் வரும் நாட்களில் ஏலம் விடப்பட உள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாராளுமன்றத்தில் பேருந்துகள் உட்பட கிட்டத்தட்ட நூறு வாகனங்கள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
(லங்காதீப)