மியன்மார் நிலநடுக்கத்தில் 5 நாளாக இடிபாட்டுக்குள் உயிரைப் பிடித்துக்கொண்டு சிக்கியிருந்த
நபரொருவர் மீட்கப்பட்டுள்ள காணொளியொன்று வெளியாகியுள்ளது.
மியன்மார் மற்றும் தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் கடுமையான சேதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
இடிந்து விழுந்த கட்டடங்களுக்குள் இருந்து குவியல் குவியலாக உடல்கள் மீட்கப்பட்ட வண்ணம் உள்ளன.
நிலநடுக்கத்தில் 2,719 பேர் பலியாகி உள்ளதாகவும், 4,521 பேர் காயமடைந்துள்ளதாகவும், 441 பேர் மாயமாகி உள்ளதாகவும் மியான்மரின் இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மேலும் மியான்மரில் 10 ஆயிரம் கட்டிடங்கள் வரை இடிந்துள்ளதாக கணக்கிட்டுள்ளது.
இதற்கிடையே கடும் போராட்டத்துக்கு 26 வயது இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
நைபிடோவில் உள்ள ஹோட்டல் ஒன்றின் ஊழியறாக பணியாற்றி வந்தவர் நைங் லின் துன் என்பவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை நிலநடுக்கத்தின்போது ஹோட்டல் இடிந்து விழுந்ததில் பலருடன் அவரும் உள்ளே சிக்கிக் கொண்டுள்ளார்.
இந்நிலையில் இடிபாடுகளின் உள்ளே சிக்கியவர்களை கண்டறிய மீட்புக் குழுவினர் எண்டிஸ்கோபிக் கேமராவைப் பயன்படுத்தி அவர் உயிருடன் இருப்பதை உறுதி செய்துள்ளனர்.
அவரை ஒரு தரைப்பகுதி வழியாக ஜாக் ஹாமர் துளையிடும் இயந்திரத்தை பயன்படுத்தி துளையிட்டு மீட்டுள்ளனர்.
அவர் உள்ளே சிக்கி சுமார் 108 மணி நேரத்திற்குப் பிறகு அவர் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு IV டிரிப் பொருத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.