இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பை திருத்துவதற்கு

அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, குறைந்த வருமானம் பெறும் பலருக்கு வரி சலுகைகள் கிடைக்கும் என அரசு சுட்டிக்காட்டுகிறது.

இதேவேளை எந்தவொரு வைப்புத்தொகை உரிமையாளருக்கும் செலுத்தப்பட வேண்டிய வட்டி அல்லது தள்ளுபடி செலுத்துதல்களுக்கு 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைப்பதை இன்று முதல் நடைமுறைபடுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, இன்று முதல், இலங்கையில் உள்ள எந்தவொரு நபருக்கு செலுத்தப்பட வேண்டிய வட்டி, தள்ளுபடி மற்றும் இஸ்லாமிய நிதி பரிவர்த்தனைகள் மூலம் பெறப்பட்ட வருமான செலுத்துதல்களுக்கு, முகவராக செயல்படும் எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனமும் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரியை குறைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை வருடாந்திர வருமானம் 18 இலட்சம் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள், வைப்புத் தொகைகளுக்கு கிடைக்கும் வட்டி அல்லது தள்ளுபடிகளுக்கு விதிக்கப்படும் முன்பண வருமான வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவிக்கின்றது.

எவ்வாறாயினும், இந்த சுற்றறிக்கையின்படி, வட்டி வருமானம் 10 சதவீத விகிதத்தில் முன்பண வருமான வரிக்கு உட்பட்டாலும், மதிப்பீட்டு வருடத்திற்கான வருமானம் 18 இலட்சம் ரூபாயை தாண்டாத நபர்கள் வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.

அதன்படி, இந்த வரி சலுகையை கோர விரும்பும் நபர்கள், அந்த மதிப்பீட்டு வருடத்திற்கு அனைத்து வருமான மூலங்களிலிருந்து மதிப்பிடக்கூடிய வருமானம் தொடர்பாக சுய பிரகடனத்தை வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களுக்கு சமர்ப்பித்து, அந்த வரி சலுகையை கோரலாம் என உள்நாட்டு வருமான திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.

இதற்கிடையில், உள்நாட்டு வருமான சட்டத்தின் திருத்தங்களுக்கு அமைய, வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் சேவைகளிலிருந்து பெறப்படும் வருமானங்களுக்கு 15 சதவீத வரி விதிப்பு இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

அதற்கு மேலதிகமாக, ஒரு சொத்தை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதற்கான ஒப்பந்த பத்திரத்திற்கு தொடர்புடைய முத்திரை கட்டணமும் இன்று முதல் உயர்த்தப்பட்டுள்ளது.

1,000 ரூபாய் அல்லது அதன் ஒரு பகுதிக்கு இதுவரை 10 ரூபாய் முத்திரை கட்டணம் விதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் அது 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி