இணையத்தில் கடந்த சில தினங்களாக ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் Ghibli-style
படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது.
ஜிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும். இந்த ஸ்டூடியோ பல அனிமேஷன் படங்களையும் தயாரித்திருக்கிறது. இதனை மையப்படுத்தி தற்போது ஜிப்லி புகைப்படங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
ChatGPT இல் புகைப்படங்களைப் பதிவேற்றி ஜிப்லி புகைப்படங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
பலரும் தங்களின் புகைப்படங்களை இந்த அனிமேஷனுக்கு மாற்றி தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், பயனாளர்கள் ஒரே நேரத்தில் இந்த அனிமேஷன்களை பயன்படுத்துவதால் சிக்கல்கள் எழுந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சேம் அல்ட்மென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், OpenAI-யின் கணினி வளங்களை அதிகம் பயன்படுத்துகிறது. பல பயனர்கள் ஒரே நேரத்தில் இதைப் பயன்படுத்துவதால் சர்வர் அதிக பரபரப்பாக செயல்படுகிறது.
https://x.com/sama/status/1906210479695126886
AI சேவைகள் தடைபடலாம் அல்லது வேகமாக செயல்படாமல் போகலாம். இதனை சமநிலையில் வைத்திருக்க OpenAI-யின் நிர்வாகம் புதிய முடிவுகளை எடுத்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று, சில ஸ்டைல் புகைப்படங்களை உருவாக்கும் வேகத்தைக் குறைப்பது.
OpenAI-யின் AI கருவிகள் நாளுக்கு 24 மணிநேரம் செயல்படுகின்றன. இதற்காக, OpenAI-யின் பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டிய நிலை உருவாகிறது.
அதிக உழைப்பு, அதிக சுமை ஆகியவைகள் OpenAI-யின் ஊழியர்கள் மீது அழுத்தமாக இருக்கலாம்.
சேம் ஆல்ட்மேன் தனது "எங்கள் பணியாளர்களுக்கும் தூக்கம் தேவை" என்று குறிப்பிட்டுள்ளார் .
தற்போது அவரின் பதிவு சமூக ஊடகங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.