மியன்மாரை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,002ஆக அதிகரித்துள்ளது.

அதோடு, 2,376 பேர் காயமடைந்துள்ள வேளையில், 30 பேரைக் காணவில்லை. மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அந்நாட்டின் ஆளும் ராணுவம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், இப்பேரிடரில் பாதிக்கப்பட்ட தங்கள் நாட்டு மக்களுக்கு உதவி மற்றும் நன்கொடைகளை வழங்குமாறு இராணுவம் அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்துலக உதவிக்கான வழிகள் திறந்துவிட்டபட்டதோடு, உதவிக்கரம் நீட்ட முன்வந்த ஆசியானின் இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய கூட்டமைப்பின் சலுகைகளையும் தாங்கள் ஏற்றுக்கொண்டதாக மின் அவுங் லாயிங்  கூறினார்.

ரிக்டர் அளவைக் கருவியில் 7.7ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தினால் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததோடு, உள்கட்டமைப்புகளும் சேதமடைந்தன.

அதுமட்டுமின்றி, நாட்டின் மிகப்பெரிய நகரமான யாங்கோனில் கடுமையான அதிர்வுகள் உணரப்பட்டன. அங்கு குடியிருப்பாளர்கள் பதற்றமடைந்ததோடு பள்ளி மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.

மியான்மரின் இரண்டாவது பெரிய நகரமான மண்டெலெயிலும் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்நாட்டின் பல பகுதிகளில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

Our Brands

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

Pulseline Logo web

பிந்திய செய்தி