யோகட்டுடன் வழங்கப்படும் அட்டைக் கரண்டியை இளம் குழந்தைகள் அதிக நேரம் வாயில்
வைத்திருந்தால் உருகும் தன்மை இருப்பதால், யோகட்டுடன் மரக் கரண்டியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மில்கோ தலைவர் ஹேமஜீவ கோத்தபய தெரிவித்தார்.
நாட்டில் போதுமான அளவு அத்தகைய கரண்டிகள் உற்பத்தி செய்யப்படாததால், ஒரு குறிப்பிட்ட அளவு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
யோகட்டுடன் வழங்கப்பட்ட அட்டைக் கரண்டி தொடர்பாக வாடிக்கையாளர்களிடமிருந்து முறைப்பாடுகள் வந்ததை அடுத்து, மரக் கரண்டியை வழங்க முடிவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.